»   »  தசாவதாரம்-8 ரெடி, 2 பாக்கி!

தசாவதாரம்-8 ரெடி, 2 பாக்கி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தசாவதாரத்தில் 8 அவதாரங்கள் ரெடியாகி விட்டன. இன்னும் 2 அவதாரங்களை ஷூட் செய்ய வேண்டியதுதான் பாக்கியாம்.

கமல்ஹாசன் ஒரு கெட்டப்பில் நடித்தாலே பக்கத்தில் யாரும் வர முடியாது. இந் நிலையில் 10 கெட்டப்களில், படு அட்டகாசமாக கமல் நடிக்கஉருவாகி வரும் தசாவதாரம், கோலிவுட்டை மட்டுமல்லாது இந்தியத் திரையுலகையே கமல் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தசாவதாரம் படத்தின் கதை குறித்து அவ்வப்போது சிலை கதைகள் வெளியாகி வந்தாலும் கூட படத்தைப் பற்றிய சிறு தகவல் கூட வெளியாகிவிடாமல் படு கமுக்கமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், கமல்ஹாசனும்.

இதுவரை எட்டு வேடங்களுக்கான காட்சிகளை முழுமையாக எடுத்து முடித்து விட்டார்களாம். இன்னும் 2 வேடங்களுக்கான காட்சிகள்தான்பாக்கியாம்.

இந்த இரண்டு கேரக்டர்களும், மற்ற எட்டு கேரக்டர்களை விட படு வித்தியாசமானவையாம். இந்த இரண்டு பாத்திரங்களும் படத்தில் மிகவும்முக்கியமான கேரக்டர்களாக வருவதால், மொத்த யூனிட்டுமே இந்த ஷூட்டிங்கை படு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளதாம்.

இரு கேரக்டர்களுக்கான காட்சிகளும் விரைவில் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளதாக படத்தின் பி.ஆர்.ஓ. நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

படத்தின் கதை 12ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறதாம். அப்போது தமிழகத்தில் குலோத்துங்க சோழனின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.குலோத்துங்க சோழனாக நடிப்பவர் நெப்போலியன். ரங்கராஜ நம்பி. என்ற பெயரில் வைணவப் பெரியவர் வேடத்தில் இந்தக் காலகட்டத்தில்நடிக்கிறார் கமல்.

இந்தக் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும்போதே டபக்கென்று அமெரிக்காவுக்கு காட்சிகள் தாவுகின்றன. நாசாவின் ஹைடெக் ஆய்வகம் ஒன்றில்விஞ்ஞானி கமல் உட்கார்ந்து சீரியஸான ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

நாசா போன்று போடப்பட்ட செட்டில் இந்தக் காட்சிகளை சுட்டுள்ளனர். இதேபோல அடுத்தடுத்து கமல்ஹாசனின் அவதாரங்கள் மாறி மாறி வந்துரசிகர்களுக்கு பெரும் விருந்தளிக்கவுள்ளன.

நிஜ வாழ்க்கையில் பூணூல் போடத பிராமணர் கமல் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும். ஹே ராம் படத்தில்தான் அவர் பூணூல் போட்டுநடித்தார். அதன் பிறகு இப்போது இந்தப் படத்திற்காக ரங்கராஜ நம்பி கேரக்டருக்காக பூணூல் போட்டுள்ளார்.

கமலுக்கு 3 ஜோடிகள் என்பதும் பழைய செய்தி. ஆசின் ஒரு பக்கம் (அவருக்கு ரெண்டு கேரக்டராம்!), ஜெயப்பிரதா, மல்லிகா ஷெராவத்மறுபக்கம். இவர்களின் போர்ஷன் எல்லாம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாம். இன்னும் 2 ஹீரோயின்கள் படத்தில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

படத்தில் சாமியார் வேடத்தில் ஆரம்பித்து ஆப்பிரிக்க பழங்குடி கேரக்டர் வரை கமல் என்னென்னெவோ செய்கிறாராம்.

கதை குறித்துத்தான் வாயைத் திறக்க மாட்டேங்கிறீங்க, படப்பிடிப்பு குறித்தாவது சொல்லுங்களேன் என்று கே.எஸ்.ரவிக்குமாரின் வாயைக்கிண்டினோம். சிரித்தபடி கூறினார். கமல்சாரின் கெட்டப் சேஞ்ச், நடிப்பைப் பார்த்து யூனிட்டில் உள்ள அத்தனை பேருமே ஆடிப் போய்விட்டார்கள்.

இதுவரை எடுக்கப்பட்டுள்ள 8 அவதாரங்களிலும் கமல் பின்னி எடுத்து விட்டார். இன்னும் 2 தான் பாக்கி. இதுவரை போகாத இடங்களுக்கு இந்தக்காட்சிகளின் ஷூட்டிங்குக்காக போகவுள்ளேன். பிரமாதமாக இந்தக் காட்சிகள் வரும். எங்கே போறோம்னு மட்டும் சொல்ல மாட்டோம்!

இந்தப் படம் கமலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்றார் ரவிக்குமார்.

படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சிந்திரன் இதுவரை இந்தப் படம் குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் எஸ்கேப் ஆகி வருகிறார்.படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அவர் செய்தி வெளியிடுவார் என்று தெரிகிறது.

படம் குறித்து அவரிடம் கேட்டபோது, தமிழ் திரையுலக வரலாற்றில் இந்தப் படத்திற்கு நிரந்தர இடம் கிடைக்கும். படத்தின் பட்ஜெட் குறித்து நான்கவலையே படவில்லை. இந்தப் படத்திற்காக இதுவரை நான் சேர்த்து வைத்துள்ள அத்தனை பணத்தையும் கூட செலவழிக்கத் தயாராகஇருக்கிறேன். இப்படி ஒரு படத்திற்காக செலவிடுவதை நான் பெரிய விஷயமாகவே கருதவில்லை என்கிறார் பெருமையுடன்.

தசாவதாரத்திற்காக இதுவரை 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். இன்னும் 12 கோடி ரூபாய் தேவைப்படும் என்கிறார்கள். இருந்தாலும்இதுவரை எடுக்கப்பட்ட படம் படு சிறப்பாக வந்துள்ளதால், பட்ஜெட் குறித்துக் கவலைப்படாமல் படத்தை சுட்டுத் தள்ளி வருகின்றனர்.

பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷனல் ஹிமேஷ் ரேஷ்மய்யாதான் இசையமைத்துள்ளார். வாலி, வைரமுத்து பாடல்களைத் தீட்டியுள்ளனர்.படத்திற்கு மொத்தம் நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள். கணல் கண்ணன், தியகராஜன் ஆகியோர் இந்திய பாணி சண்டைக் காட்சிகளைவடிவமைத்துள்ளனர்.

ஜூப் கடானா, மடோஸ் ஆகிய இருவரும் அமெரிக்க காட்சிகளுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனராம். இவர்கள் தவிர மலேசியாவைச்சேர்ந்த சோனிலேக் என்பவரும் தற்காப்புக் கலையை அடிப்படையாகக் கொண்ட சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளாராம். படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கமலே எழுதியுள்ளார்.

இந்தப் படத்துக்காக மல்லிகா ஷெராவத் ஆட, கமல் அதைப் பார்த்து ரசிக்க, சூப்பர் பாட்டு ஒன்றை சுட்டுள்ளனர். அந்தப் பாட்டு வரிகளைகொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன் ..

இருட்டுக்குள்ளே படுக்கைக்குள்ளே பேதமில்லை என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலின் வரிகள் படு ஜாலியாப் போகின்றன.

க .. கருப்பனுக்கும்
வெ ...வெள்ளையருக்கும்
பே ... பேதமில்லை
இ .. இருட்டுக்குள்ளே
ப .. படுக்கைக்குள்ளே
வா ..வாதமில்லை

கருப்பர்கள் ஒரு சுவை
வெள்ளையர்கள் ஒரு சுவை
என்பது பழைய கட்சி
விளக்குகள் அணைந்த பின்னே
வெளுப்பென்ன கருப்பெண்ண
என்பது என் கட்சி

டா ... டாலருக்கும்
கா .. காமனுக்கும்
பே .. பேதமில்லை
உள்ளே சம்மர் வெளியே விண்டர்எந்தன் மேனியில் எங்கும் தொட்டுக்கோ.... என்று போகிறது பாட்டு.

இந்தப் பாட்டை கோலாலம்பூரில் வைத்து அட்டகாசமாக சுட்டுள்ளனர். சூரியனையை சுட்டெரிக்கும் வகையில் ஜொலிக்கும் நியான் விளக்குகளின்பின்னணியில் படு கிளாமரான காஸ்ட்யூமில் மல்லிகா ஷெராவத் ஆட்டம் போட்டார். அவருடன் 20அமெரிக்க டான்ஸர்களும் சேர்ந்து ஆடினர்.

இந்த ஆட்டத்தை ஒரு வெள்ளைக்காரர் படு நிதானமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கூட்டத்தோடு ஆடிக் கொண்டிருந்த மல்லிகா, அந்தவெளிநாட்டுக்காரரைப் பார்த்தவுடன் அவர் அருகே போய் ஒரு கும்மாட்டத்தைப் போட்டுக் காட்டினார்.

அப்போதுதான் தெரிந்தது, அந்த வெள்ளைக்காரர் வேறு யாருமல்ல, நம்ம கமல்தான் என்று! அது ஒரு கெட்டப்பாம். இந்தப் பாட்டுக்கு டான்ஸ்போட்டவர் பிருந்தா மாஸ்டர்.

அப்பப்பா, சீக்கிரமா வாங்கப்பா, தாங்க முடியலப்பா!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil