»   »  கமலுக்குப் புதிய பெருமை!

கமலுக்குப் புதிய பெருமை!

Subscribe to Oneindia Tamil

விருதுகளை வாங்கி வாங்கி டயர்ட் ஆகி விட்ட கமல்ஹாசனுக்கு புதிதகாக ஒரு பெருமை கிடைத்துள்ளது.

நடிப்போடு மட்டுமல்ல விருதுகளோடும் போட்டி போடும் வித்தியாசக் கலைஞன் கமல்ஹாசன். எத்தனை விருதுகளை வாங்கியிருப்போம் என்றுகமலுக்கே கூட நினைவிருக்காது.

எனக்கு இனிமேல் விருதே கொடுக்காதீர்கள் என்று பிலிம்பேர் விருதுக் கமிட்டிக்கு ஒருமுறை கமல்ஹாசன் வேண்டுகோளே விடுத்தார். அந்தஅளவுக்கு வருடா வருடம் விருதுகளை குவித்து வந்தவர் கமல்.

3 முறை தேசிய விருது, 16 முறை பிலிம்பேர் விருதுகள், கணக்கில் அடங்காத பிற விருதுகள், உச்சாணியாய் பத்மஸ்ரீ விருது என விருதுக் கடலில்நீச்சலடித்தவர், கலைக் கடல் கமல். அவருக்கு கை கூடாத ஒரே விருது ஆஸ்கர் மட்டுமே. அது கூட நம்மவர்களுக்கான விருது அல்ல என்றுஇப்போது ஆஸ்கரை விட்டு விட்டார் கமல்.

தற்போது கமல்ஹாசனைத் தேடி புதிய விருது ஒன்று வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த யு.எப்.ஓ. டிஜிட்டல் சினிமா கம்பெனி என்கிற நிறுவனம்2007ம் ஆண்டுக்கான காண்டெம்பரரி லிவ்விங் லிஜன்ட் என்ற விருதை வழங்கியுள்ளது.

மார்ச் 28ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதை கமலுக்குக் கொடுக்கவுள்ளனர்.

நடிப்பதோடு, எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்கநர், டான்ஸ் மாஸ்டர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கமல், தசாவதாரம் படத்தின்மூலம் 10 வித்தியாசமான வேடங்களைப் புனைந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தளிக்க விரைந்தோடி வருகிறார்.

தசாவதாரம் மூலம் மேலும் பல விருதுகளை அள்ளுவர் கலைஞானி கமல் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், மும்பையிலிருந்து வந்தவிருது, அவரது உற்சாகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இன்னொரு டானிக்காக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil