பி.வாசுவுடன் இணையும் கமல்

By Staff

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் கை கோர்க்கிறார் இயக்குநர் பி.வாசு.

பி.வாசுவுக்கு ரொம்ப நாளாக நிறைவேறாத ஒரு ஆசை இருந்து வந்தது. அது கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்குவது.

கமலும், பி.வாசுவும் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்கள். வாசு, ரஜினி உள்ளிட்ட மூத்த நடிகர்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவர். ஆனால் கமல்ஹாசனுடன் மட்டும் இணைய முடியாமல் இழுபறியாக இருந்து வந்தது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கமல் ஒரு பாடலை பாடியிருந்தார். அப்படத்தை இயக்கியது பி.வாசுவும், சந்தானபாரதியும், பாரதி-வாசு என்ற பெயரில்.

அன்று முதலே கமலை வைத்து இயக்க வேண்டும் என்று முயன்று வந்தார் வாசு. ஆனால் கமல் கை கூடவில்லை.

வாசுவால் முடியாததை அவரது முன்னாள் பார்ட்னர் சந்தானபாரதி சாதித்தார். கமலின் நெருங்கிய நண்பரான அவர் கமலுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார், நடித்துள்ளார்.

கமலுடன் இணைய வேண்டும் என்ற ஆசையை சந்திரமுகி படத்தின்போது கூட வாசு வெளிப்படுத்தியிருந்தார். அந்த தங்க வாய்ப்பு இப்போது வந்துள்ளது. வாசுவும், கமலும் புதிய படத்தில் இணைகிறார்கள்.

தசாவதாரம் படத்தை முடித்த பின்னர் சகலகலாவல்லவன் ரேஞ்சுக்கு ஒரு ஆர்ப்பாட்டமான படத்தில் கமல் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை வாசுதான் இயக்க வேண்டும், அவர்தான் சரியான ஆள் என்று முடிவு செய்த கமல் அதை வாசுவிடம் கூறினார்.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே சத்யஜோதி இயக்கிய மூன்றாம் பிறை படம் கமலுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு சத்யஜோதி நிறுவனத்துடனும் கமல் இணையவில்லை.

எனவே வாசுவும், சத்யஜோதியும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கமலுடன் கை கோர்க்கிறார்கள். எனவே இந்தப் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கமல், வாசு, சத்யஜோதி இணையும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறாராம்.

வாசுவும், இளையராஜாவும் கூட இணைந்து பணியாற்றி ரொம்ப நாட்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X