»   »  தசாவதாரம்: கமலுடன் மோதும் உதவி இயக்குனர்

தசாவதாரம்: கமலுடன் மோதும் உதவி இயக்குனர்

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தை தடை செய்யக் கோரிசென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் ஒரு உதவிஇயக்குனர்.

இதுதொடர்பாக உதவி இயக்குனர் செந்திலகுமார் என்பவர் ஆணையர் லத்திகாசரணிடம் கொடுத்துள்ள புகாரில்,

நான் மேற்கு தாம்பரத்தில் வசித்து வருகிறேன். தனுஷ் என்ற படத்தில் உதவிஇயக்குனராக பணியாற்றி வந்தேன். படம் பாதியிலேயே கைவிடப்பட்டு விட்டது.

அப்படத்தில் 10 கதாபாத்திரம் கொண்ட கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தக்கதையை நான் தான் எழுதியிருந்தேன். அந்தப் படத்தில் நடிக்க கமல்ஹாசன்தானபொருத்தமானவர் என நினைத்து அவரை அணுகினேன்.


கமல் அலுவலகத்தில் இருந்த முரளி என்பவர் கதையை வாங்கிப் படித்தார். பின்னர்அதன் பிரதியை தன்னுடன் வைத்துக் கொண்டார். பின்னர் ஒரு நாள் என்னை அவர்தொலைபேசியில் அழைத்தார். என்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளுமாறுகமல் தன்னிடம் கூறியதாக முரளி தெரிவித்தார்.

இந் நிலையில் ஆகஸ்ட் 18ம் தேதி தசாவதாரம் படத்தின் தொடக்க விழா நடந்தது.அதுகுறித்து முரளியிடம் கேட்டேன்.


அப்போது உன்னிடம் யார் போனில் பேசியது, நான் பேசவில்லை. இனிமேல்அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று கூறினார்.

எனது கதையை வைத்துத்தான் தசாவதாரம் படத்தை எடுக்கிறார்கள். எனவே இருதரப்பையும அழைத்துப் பேசி நியாயம் வழங்க வேண்டும். அதுவரை படத்தை எடுக்கதடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார் செந்தில்குமார்.


இதற்கிடையே தசாவதாரம் படத்துக்காக கமல் ஏகத்துக்கும் மெனக்கெட்டுக்கொண்டிருக்கிறார். தனது புது ஹைர்ஸ்டைலை மறைக்க எப்போதும் தொப்பியுடனேவலம் வருகிறார். தாடி வேறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை புக் செய்ய இருந்தார்கள். ஆனால்,அவர் படு பிஸியாம். இதையடுத்து இந்தியின் முன்னணி ஆல்பங்களை வெளியிட்டுவரும் ஹிமேஷ் ரேஷ்மையாவை இசையமைப்பாளராக்கிவிட்டார் கமல். இவர்இந்தியில் 6 படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.


படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க இயக்கி வருவதுகே.எஸ்.ரவிக்குமார் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil