»   »  கமலி ஹாசன்..

கமலி ஹாசன்..

Subscribe to Oneindia Tamil

அவ்வை சண்முகியில், அழகான மாமியாக வந்து அசத்திய கலைஞானிகமல்ஹாசன், தசாவதாரத்தில் இளம் பெண் வேடம் பூண்டு ரசிகர்களைகுஷிப்படுத்தவுள்ளார்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் பிரமாண்டத் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமாரின்இயக்கத்தில், கமல்ஹாசன் 10 வேடம் பூண்டு நடிக்கும் திரைத் திருவிழாதான்தசாவதாரம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக மிக வித்தியாசமான பத்து பாத்திரங்களில் கமல்நடிக்கும் படம் என்பதால் கமல் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், திரைரசிகர்களிடையேயும் தசாவதாரம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது.

இப்படத்தில் கமல் போடும் 10 வேடங்கள் குறித்த தகவல்களை படு இறுக்கமாக கமல்அண்ட் கோ வைத்துள்ள போதிலும், அரசல் புரசலாக அவ்வப்போது தகவல்கள்வெளியாகி வருகின்றன. தற்போது கமல் போடும் வேடங்களில் ஒன்று குறித்த தகவல்கசிந்துள்ளது.

அதாவது பத்து வேடத்தில் பெண் வேடமும் ஒன்றாம். அதுவும் கட்டழகான இளம்பெண் வேடமாம். இந்த வேடத்தை கம்ப்யூட்டர் உதவியோடு வரைந்து, அது கமலுக்குபொருத்தமாக இருக்கும் என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திய பின்னரே அந்தவேடத்தை இறுதி செய்தார்களாம்.

அவ்வை சண்முகியிலும் இப்படித்தான் கம்ப்யூட்டர் மூலம் சண்முகி வேடத்தை முடிவுசெய்து நடித்து திரையுலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தினார் கமல்.

இப்போது அதை விட படு இளமையான பெண் வேடத்தில் கமல் நடிக்கப் போவதாகதகவல் வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 50 வயதைக் கடந்த கமல்,இளம் பெண் வேடத்தில் நடிக்கவிருப்பது நிச்சயம் சவாலான ஒரு சங்கதிதானே.

இப்படத்தில் மல்லிகா ஷெராவத், ஆசின், ஜெயப்பிரதா ஆகியோரும் உள்ளனர்.இதில் ஆசினுக்கு இரட்டை வேடம் கொடுத்துள்ளனர். அவர் நடிக்கவிருக்கும் முதல்இரட்டை வேடப் படம் இதுதான்.

கமல் நடிக்கும் இன்னொரு வேடம் டூரிஸ்ட் கைடு கதாபாத்திரமாம். இதற்காக சூப்பர்கெட்டப்பில் வருகிறாராம கமல். இந்த கேரக்டருக்கு உதார் மணி என்று பெயரும்வைத்துள்ளார்களாம். கடைசி நேரத்தில் பெயரை மாற்றி விடவும் வாய்ப்புண்டு,காரணம், ரகசியம் வெளியாகி விட்டதே..

இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், இசையமைப்பாளர் ஹிமேஷ்ரேஷ்மயா. இந்தித் திரையுலகை கலக்கி வரும் ஹிமேஷ், தசாவதாரம் மூலம் தமிழ்ரசிகர்களை குளிர்விக்க வருகிறார். இவரது பாடல்களுக்கு மயங்கி, இந்திரசிகர்களிடையே பெரும் கூட்டமே கும்மாளமிட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் ரசிகர்களையும் எனது இசையால் சவட்டி அடிப்பேன் என படு நம்பிக்கையாககூறுகிறார் ஹிமேஷ்.

ஷங்கரின் பிரமாண்ட படைப்பில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின்சிவாஜியும், கமல்ஹாசனின் தசாவதாரமும் அடுத்த ஆண்டின் பிரமாண்ட மோதல்படங்களாக மாறியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த இரு பிரமாண்டங்களில்எது முந்தப் போகிறது என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil