»   »  டிவிடியில் மருதநாயகம்!

டிவிடியில் மருதநாயகம்!

Subscribe to Oneindia Tamil

இதுவரை எடுக்கப்பட்டுள்ள மருதநாயகம் படத்தின் காட்சிகளை டிவிடி வடிவில்வெளிநாடுகளில் புழக்கத்தில் விட்டுள்ளாராம் கமல்.


அந்த டிவிடியில் மருதநாயகம் படத்திற்கு நிதி உதவி கோரி ஒரு கோரிக்கையையும்வைத்துள்ளாராம்.

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு லட்சியம், கனவு இருக்கும். கமலின் லட்சியம்மருதநாயகம். தனது லட்சியப் படத்தை இங்கிலாந்து ராணியை வைத்து தொடங்கினார்கமல்ஹாசன்.

படத்துக்கு பிரிட்டிஷ் நிதியுதவி வரவிருந்த நிலையில், போக்ரானில் அணு குண்டுசோதனை நடத்தியது இந்தியா. இதையடுத்து இந்தியா மீது அமெரிக்கா, ஐரோப்பாஉள்ளிட்டவை பொருளாதாரத் தடைகளை விதித்தன.

அதில் கலை சார்ந்த படைப்புகளுக்கான நிதியுதவிகளுக்கும் தடை விழுந்துவிடமருதநாயகம் தயாரிப்பு தடைபட்டது.


நிதியில்லாத காரணத்தால் படத்தை பாதியிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று.கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய காட்சிகளை படம் பிடித்துவைத்துள்ளார் கமல்.

அதற்காகவே அவர் ரூ. 20 கோடி வரை செலவிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. சாபுசிரிலை வைத்து படத்துக்கான செட் அமைக்கவே பல கோடிகளை கொட்டினார் கமல்.

அது தவிர வெளிநாட்டு நடிகர்கள், நடிகைகளுக்கு அட்வான்ஸ் என அவர் இழந்ததுசில கோடிகள்.

மருதநாயகத்தை முடிக்க கமல் அதிகம் நம்பியது வெளிநாட்டு முதலீட்டைத் தான்.

ஆனால், பணமில்லாமல் போனதால் வெறுத்துப் போன கமல் மருதநாயகத்தை நிறுத்திவிட்டார். இந்தப் படதுக்கு பணம் தேற்றுவதற்காக வெளிப்படங்களை அள்ளிப்போட்டு நடிக்க ஆரம்பித்தார்.

இப்போது மீண்டும் மருதநாயகத்தை தூசி தட்டத் தொடங்கியுள்ளார் கமல். முதல்கட்டமாக நிதியுதவிக்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளார்.


இதற்காக இதுவரை எடுக்கப்பட்ட மருதநாயகம் காட்சிகளைத் தொகுத்து,இளையராஜாவின் இனிய இசையின் பின்னணியில் 15 நிமிடங்கள் வரும் வகையில்தொகுத்துள்ளார்.

இதை டிவிடியாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் புழக்கத்தில் விட்டுள்ளார்.

அதில் ஒரு செய்தியையும் வைத்துள்ளார். இப்போது பார்த்த 15 நிமிடக் காட்சிகளை 3மணி நேர படமாக பார்க்க வேண்டுமா? அப்படியானால் அந்தக் கனவு நனவாகநிதியுதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளாராம் கமல்.

அவரது இந்த முயற்சிக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை.ஆனால் நிச்சயம் ஏதாவது வழி பிறக்கும் என்று கமல் தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.

மருதநாயகம் படத்தை முடிக்க 100 கோடி தருவதாக கூறித்தான் கமலுக்கு அதிமுகவலை விரித்ததாக தேர்தல் நேரத்தில் பரபரப்பு கிளம்பியது நினைவுகூறத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil