twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கரும், தர்மமும்- கமல் கவிஞர் புவியரசுவின் நூல்கள் வெளியீட்டு விழா கோவை சிஐடி கல்லூரியில் நடந்தது. அதில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற கமல் நூல்களை வெளிட்டுப் பேசுகையில்,எனக்கு புவியரசுவை 30 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர் முதன்முதலில் என்னைச் சந்தித்த காலத்தில்நான் நல்ல நடிகன் என்றோ, சினிமாவை நேசிக்கிற ரசிகன் என்றோ யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.அப்போது என்னை அடையாளம் கொண்டு என்னை முதன்முதலாக நட்பு பாராட்டியவர் புவியரசு. கவிஞனைஅவன் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்.இந்த விழாவில் நான் பங்கேற்க புவியரசுடனான என் நட்பு மட்டும் காரணமல்ல. தமிழ் மீது நான் கொண்டுள்ளபற்றும் தான் காரணம்.காதலர்கள் தங்களுக்குள் தங்க மோதிரம், பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்வதை மாற்றி புத்தகங்களைபரிசளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். காதலிக்கு கவிதைப் புத்தகத்தை பரிசலிக்கலாம். அதை காதலி சும்மாவாவதுபடித்துக் கொண்டிருக்கலாம்.உங்களுக்குப் பிடித்ததை பற்றி படியுங்கள். எதையாவது படித்துத் தொலையுங்கள் என்று கூட சொல்வேன்.அப்போது தான் சந்தேகங்கள் வரும், கேள்விகள் கிளம்பும். புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாகத் தொடங்கவேண்டும்.கவிஞர்களின் உதவியோடு அமரகாவியம் என்ற படத்தை எடுக்க நானும் புவியரசும் திட்டமி"டடோம். ஆனால்,அது கிடப்பில் உள்ளது.ஆஸ்கர் நாயகனே என்று என்னை ரசிகர்கள் அழைக்கிறார்க். ஆஸ்கர் பற்றி பேசிப் பேசி எனக்கு அலுத்துப்போய்விட்டது. அது ஹாலிவுட் படங்களுக்குத் தரப்படும் விருதாகிவிட்டது. தமிழ்ப் படம் மூலம் நடித்துஆஸ்கரைப் பெறுவது என்பது, தர்மம் (பிச்சை) பெறுவதற்குச் சமம்.ஹாலிவுட் ஹீரோக்கள் தமிழில் நடித்து விருது பெறட்டும். வேண்டுமானால் அந்த விருதுக்கு ஹாசன் விருது எனப்பெயரிடலாம். அமெரிக்க நடிகர்களுடன் அந் நாட்டுப் படங்களில் நடித்து ஆஸ்கர் வாங்குவதில் தான்உண்மையான பெருமை இருக்கிறது என்றார் கமல்.

    By Staff
    |

    கவிஞர் புவியரசுவின் நூல்கள் வெளியீட்டு விழா கோவை சிஐடி கல்லூரியில் நடந்தது. அதில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற கமல் நூல்களை வெளிட்டுப் பேசுகையில்,

    எனக்கு புவியரசுவை 30 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர் முதன்முதலில் என்னைச் சந்தித்த காலத்தில்நான் நல்ல நடிகன் என்றோ, சினிமாவை நேசிக்கிற ரசிகன் என்றோ யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அப்போது என்னை அடையாளம் கொண்டு என்னை முதன்முதலாக நட்பு பாராட்டியவர் புவியரசு. கவிஞனைஅவன் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்.


    இந்த விழாவில் நான் பங்கேற்க புவியரசுடனான என் நட்பு மட்டும் காரணமல்ல. தமிழ் மீது நான் கொண்டுள்ளபற்றும் தான் காரணம்.

    காதலர்கள் தங்களுக்குள் தங்க மோதிரம், பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்வதை மாற்றி புத்தகங்களைபரிசளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். காதலிக்கு கவிதைப் புத்தகத்தை பரிசலிக்கலாம். அதை காதலி சும்மாவாவதுபடித்துக் கொண்டிருக்கலாம்.

    உங்களுக்குப் பிடித்ததை பற்றி படியுங்கள். எதையாவது படித்துத் தொலையுங்கள் என்று கூட சொல்வேன்.அப்போது தான் சந்தேகங்கள் வரும், கேள்விகள் கிளம்பும். புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாகத் தொடங்கவேண்டும்.


    கவிஞர்களின் உதவியோடு அமரகாவியம் என்ற படத்தை எடுக்க நானும் புவியரசும் திட்டமி"டடோம். ஆனால்,அது கிடப்பில் உள்ளது.

    ஆஸ்கர் நாயகனே என்று என்னை ரசிகர்கள் அழைக்கிறார்க். ஆஸ்கர் பற்றி பேசிப் பேசி எனக்கு அலுத்துப்போய்விட்டது. அது ஹாலிவுட் படங்களுக்குத் தரப்படும் விருதாகிவிட்டது. தமிழ்ப் படம் மூலம் நடித்துஆஸ்கரைப் பெறுவது என்பது, தர்மம் (பிச்சை) பெறுவதற்குச் சமம்.

    ஹாலிவுட் ஹீரோக்கள் தமிழில் நடித்து விருது பெறட்டும். வேண்டுமானால் அந்த விருதுக்கு ஹாசன் விருது எனப்பெயரிடலாம். அமெரிக்க நடிகர்களுடன் அந் நாட்டுப் படங்களில் நடித்து ஆஸ்கர் வாங்குவதில் தான்உண்மையான பெருமை இருக்கிறது என்றார் கமல்.

      Read more about: kamals advice to students
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X