கமல் புஷ் ஹாசன்!
இதுவரை இல்லாத அளவுக்கு 10 வேடங்களில் கமல் நடிக்கவிருக்கும் தசாவதாரம்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 வேடங்களையும் ரெடி செய்வதற்காகசமீபத்தில் லண்டன் சென்றிருந்தார் கமல்.
அங்கு கம்ப்யூட்டர் மேக்கப் உதவியுடன் பத்து வேடங்களையும் இறுதிசெய்துள்ளார்களாம். கம்ப்யூட்டரில் அந்த வேடத்தை தயாரித்துப் பார்த்தபோதுகமல்ஹாசனை அது மிகவும் கவர்ந்து விட்டதாம்.
வேடங்கள் எல்லாம் முடிவாகி விட்டாலும் நாயகிகள் தேர்வுதான் பெரும்பிரச்சினையாக இருந்து வருகிறதாம். 10 கமல் இருந்தாலும் கூட 6 பேருக்கு மட்டுமேஜோடியைப் போட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முடிவு செய்துள்ளார்.
இந்த ஆறு பேரை தேத்துவதற்குள் பெண்டு கழன்று விடும் போல இருக்கிறதாம்.முதலில் திரிஷா, நயனதாரா, அசின், பூமிகா என பலரிடம் கேட்டுப் பார்த்தனர்.ஆனால் யாரிடம் கேட்ட கால்ஷீட் தேதிகள் இல்லாததால் நடிக்க இயலாத நிலைஏற்பட்டதாம்.
இப்போது ஷ்ரேயாவை கேட்டுள்ளனர். அவர் ஓ.கே. சொல்லியுள்ளார். ஆனாலும்சிவாஜி பட ஷூட்டிங் முடிந்த பிறகுதான் என்னால் தேதி தர முடியும் என்றுகூறியுள்ளாராம். அதுவரை பொறுத்திருக்க முடியுமா என்றும் கேட்டுள்ளார்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க விருப்பவர்களிடம் மொத்தமாக 90 நாட்கள்கேட்கிறாராம் ரவிக்குமார். இதனால் தான் முன்னணி நாயகிகள் யாரும் சிக்கவில்லை.


Click it and Unblock the Notifications