கமலை இயக்கும் பேரரசு வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்ட கமல் அடுத்ததாக தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார்.10 வேடங்கள் கொண்ட இந்தப் படத்தை எடுத்து முடிக்க நாளாகும் என்பதால் அதை திட்டமிட்டபடி தீபாவளிக்குரிலீஸ் செய்வது கஷ்டம் என்கிறார்கள். இத்தனைக்கும் படத்தை சூப்பர் பாஸ்ட் டைரக்டரானகே.எஸ்.ரவிக்குமார் தான் டைரக்ட் செய்யப் போகிறார்.ஒல்லி, குண்டு, பெரியவர், இளைஞர், உடல் ஊனமுற்றவர் என பல்வேறு ரோல்களில் இதில் நடிக்கவுள்ளார்கமல். ஒவ்வொரு கேரக்டருக்கும் மேக்-அப் போடவே பல மணி நேரம் பிடிக்குமாம். இதனால் படத்தை அதிவேகத்தில் எடுத்தால் குவாலிட்டி போய்விடும் எனக் கருதும் கமல், அவரசப்படாமல் அதை நகர்த்திச் செல்லதிட்டமிட்டிருக்கிறாராம். இதனால் வேட்டையாடு விளையாடுக்கும் தசாவதாரத்துக்கும் இடையில் நீண்ட கேப் விழுவதைத் தடுக்க நடுவில்ஒரு படம் பண்ணும் முடிவில் இருக்கிறாராம் கமல். அந்தப் படத்தை இயக்குனர் பேரரசு டைரக்ட் செய்யலாம்என்கிறார்கள்.திருப்பாச்சி, சிவகாசி என விஜய்யை வைத்து அதிரடி படங்கள் தந்த பேரரசு இப்போது அஜீத்தை வைத்துதிருப்பதியை இயக்கி வெளியிட்டுள்ளார்.கமர்சியலாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் தனது நடிப்புக்கும் தீனி போடும் வகையில் இருக்கவேண்டும் என்ற திட்டத்துடன் பேரரசுவிடம் நல்ல கதையை உருவாக்கச் சொல்லியிருக்கிறாராம் கமல். ஆனால், பேரரசு என்றாலே பாட்டு, பைட்டு, அக்கா-அம்மா செண்டிமென்ட் ஆச்சே.. இதெல்லாம் கமலுக்குசரிப்படாதே என்றும் கோடம்பாக்கத்தில் முனுமுனுக்கிறார்கள்.அது போகட்டும்.. எஸ்.ஜே.சூர்யா, சேரன் வரிசையில் இயக்குனர் பேரரசுவுக்கே நடிக்க ஆசை வந்துவிட்டதாம்.நாட்டரசன் கோட்டை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் போகிறாராம் பேரரசு. அவருக்குசொந்த ஊரும் நாட்டரசன் கோட்டை தான்.நாட்டரசன் கோட்டையார் இம்சை அரசனாகாமல் இருந்தால் சரி..கொசுறு: ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று தனது ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமல் ஈஸ்ட் கோஸ்ட்சாலையில் நீலாங்கரையில் ஒரு மாபெரும் பங்களாவைப் பிடித்து அதில் குடியேறிவிட்டார். சரி வீட்டைக் கட்டிக் கொண்டு போய்விட்டாரோ என்று பார்த்தால்.. அது வாடகை வீடாம்.அது சரி சம்பாதிக்கிறதையெல்லாம் சினிமாவிலேயே போடுற வித்தியாச மனிதராச்சே கமல்.கொசுறு கொசுறு:கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தைத் தயாரித்த செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணனும்டைரக்ட் செய்த இயக்குனர் கெளதமும் மீண்டும் இணைகிறார்களாம். விஜய் அல்லது விக்ரமை வைத்து அந்தப்படம் உருவாகுமாம்.

By Staff

வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்ட கமல் அடுத்ததாக தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார்.

10 வேடங்கள் கொண்ட இந்தப் படத்தை எடுத்து முடிக்க நாளாகும் என்பதால் அதை திட்டமிட்டபடி தீபாவளிக்குரிலீஸ் செய்வது கஷ்டம் என்கிறார்கள். இத்தனைக்கும் படத்தை சூப்பர் பாஸ்ட் டைரக்டரானகே.எஸ்.ரவிக்குமார் தான் டைரக்ட் செய்யப் போகிறார்.

ஒல்லி, குண்டு, பெரியவர், இளைஞர், உடல் ஊனமுற்றவர் என பல்வேறு ரோல்களில் இதில் நடிக்கவுள்ளார்கமல். ஒவ்வொரு கேரக்டருக்கும் மேக்-அப் போடவே பல மணி நேரம் பிடிக்குமாம். இதனால் படத்தை அதிவேகத்தில் எடுத்தால் குவாலிட்டி போய்விடும் எனக் கருதும் கமல், அவரசப்படாமல் அதை நகர்த்திச் செல்லதிட்டமிட்டிருக்கிறாராம்.


இதனால் வேட்டையாடு விளையாடுக்கும் தசாவதாரத்துக்கும் இடையில் நீண்ட கேப் விழுவதைத் தடுக்க நடுவில்ஒரு படம் பண்ணும் முடிவில் இருக்கிறாராம் கமல். அந்தப் படத்தை இயக்குனர் பேரரசு டைரக்ட் செய்யலாம்என்கிறார்கள்.

திருப்பாச்சி, சிவகாசி என விஜய்யை வைத்து அதிரடி படங்கள் தந்த பேரரசு இப்போது அஜீத்தை வைத்துதிருப்பதியை இயக்கி வெளியிட்டுள்ளார்.

கமர்சியலாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் தனது நடிப்புக்கும் தீனி போடும் வகையில் இருக்கவேண்டும் என்ற திட்டத்துடன் பேரரசுவிடம் நல்ல கதையை உருவாக்கச் சொல்லியிருக்கிறாராம் கமல்.


ஆனால், பேரரசு என்றாலே பாட்டு, பைட்டு, அக்கா-அம்மா செண்டிமென்ட் ஆச்சே.. இதெல்லாம் கமலுக்குசரிப்படாதே என்றும் கோடம்பாக்கத்தில் முனுமுனுக்கிறார்கள்.

அது போகட்டும்.. எஸ்.ஜே.சூர்யா, சேரன் வரிசையில் இயக்குனர் பேரரசுவுக்கே நடிக்க ஆசை வந்துவிட்டதாம்.

நாட்டரசன் கோட்டை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் போகிறாராம் பேரரசு. அவருக்குசொந்த ஊரும் நாட்டரசன் கோட்டை தான்.

நாட்டரசன் கோட்டையார் இம்சை அரசனாகாமல் இருந்தால் சரி..

கொசுறு: ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று தனது ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமல் ஈஸ்ட் கோஸ்ட்சாலையில் நீலாங்கரையில் ஒரு மாபெரும் பங்களாவைப் பிடித்து அதில் குடியேறிவிட்டார்.


சரி வீட்டைக் கட்டிக் கொண்டு போய்விட்டாரோ என்று பார்த்தால்.. அது வாடகை வீடாம்.

அது சரி சம்பாதிக்கிறதையெல்லாம் சினிமாவிலேயே போடுற வித்தியாச மனிதராச்சே கமல்.

கொசுறு கொசுறு:

கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தைத் தயாரித்த செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணனும்டைரக்ட் செய்த இயக்குனர் கெளதமும் மீண்டும் இணைகிறார்களாம். விஜய் அல்லது விக்ரமை வைத்து அந்தப்படம் உருவாகுமாம்.

Read more about: perarasu to direct kamal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X