ஹீரோ .. ஹீரோ ..

By Staff

"சேது", "நந்தா" ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் பாலா விரைவில் கமலஹாசனை வைத்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார்.

"சேது" மூலம் விக்ரமையும் "நந்தா" மூலம் சூர்யாவையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பாலா அடுத்து இந்த இரண்டு ஹீரோக்களையும் வைத்து தனதுமூன்றாவது படத்தை எடுக்கவுள்ளார்.

படத்திற்கான கதை ரெடியாகி விட்டதாம். விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனை வைத்தும் ஒரு படத்தை எடுக்கவுள்ளார் பாலா.

இதற்கிடையே சமீப காலமாக காமெடி படங்களாக நடித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் கமல், மீண்டும் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கவுள்ளார்.

"ஹே ராம்" படத்திற்குப் பிறகு இது தேசிய அளவில் பேசப்படும் படமாக இருக்குமாம். இந்தப் புதிய படத்திற்கான இயக்குநர், கதை போன்றவை குறித்துகமல் தரப்பினர் அலசி வருகிறார்களாம்.

ஜினியின் "பாபா" வெளியாகும் அதே நாளில் தான் விஜயகாந்த்தின் "ரமணா"வும், டி. ராஜேந்தரின் "காதல் அழிவதில்லை"யும் ரிலீஸாகின்றன.

"பாபா" வெளியாகும் அதே நேரத்தில் "ரமணா"வும் வெளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டது யார் தெரியுமா? சூப்பர் ஸ்டார் தானாம். என்ன காரணம்?ரஜினிக்கும் விஜயகாந்த்துக்கும் தான் வெளிச்சம்.

கத் சிங் வாழ்க்கை வரலாறு குறித்து அஜய் தேவ்கன் மற்றும் பாபி தியோல் நடித்து வெளியான இரு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தது தமிழர்களானகே.வி.ஆனந்த் மற்றும் திரு ஆகியோர்தான். இந்திய அளவில் அதிகம் இந்த இரு படங்களும் நன்றாகப் பேசப்பட்டன.

இவற்றில் ஒரு படத்தை இயக்கிய ராஜ்குமார் சந்தோஷியின் தாயாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்பது போனஸ் செய்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X