ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நடிகர் கமல்ஹாசன் தனது 49வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடினார். அப்போது ஏழை,எளிய மக்களுக்கு கைத்தறி சேலைகள், வேட்டிகளை கமல்ஹாசன் வழங்கினார்.

ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் பிறந்த நாள் விழா நடந்தது. நடிகர்கள் நாகேஷ், சத்யராஜ்,நெப்போலியன் உள்ளிட்டவர்கள் நேரில் வந்து கமல்ஹாசனை வாழ்த்தினர்.

ஏழை, எளிய மக்களுக்கு கைத்தறி சேலைகள், வேட்டிகளை வழங்கினார் கமல். பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர்பேசுகையில்,

எனது மக்கள் சேவை தொடரும். எந்தவித அரசியல் சார்பும், சாயம் இன்றி இந்த சேவை நீடிக்கும்.

எனக்குப் பின்னும் இந்த இயக்கம், மக்கள் இயக்கமாக நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தபாக்கியத்தை எனக்குக் கொடுத்துள்ள ரசிகர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

முன்னதாக தன்னைச் சந்திக்க வரும் ரசிகர்கள் மாலையோ, சால்வையோ கொண்டு வரக் கூடாது எனவும்கைத்தறியால் ஆன சேலைகளையும் வேட்டிகளையும் வாங்கி வர வேண்டும் எனவும் கமல் கட்டளையிட்டிருந்தார்.

இதனால் பெரும் அளவிலான வேட்டி, சேலைகள் குவிந்தன. அவற்றை முதியோர் மற்றும் ஏழைகளுக்கு கமல்வழங்கினார். மேலும் குவியும் உடைகளை முதியோர் இல்லங்களுக்கு அளிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

மாலையில் காமராஜர் அரங்கில், பல்வேறு விருதுகளை வழங்கியும், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகளை வழங்கியும் கமல்ஹாசன் பேசுகிறார்.

கமலுக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில், கொட்டும் மழையில் நீண்ட நேரம்காத்திருந்தனர்.

காலையில் ரஜினியிடம் இருந்து கமலுக்கு முதல் டெலிபோன் வாழ்த்து கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X