ஹீரோ .. ஹீரோ ..

By Staff

மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தன்னுடைய உடலையே தானம் செய்ய கமல்முடிவெடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் வித்தியாசமான நாயகனாகவும், மனித நேயம் மிக்கவராகவும் விளங்கும் நடிகர் கமல்ஹாசன்ஏற்கனவே தனது கண்களைத் தானம் செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டார். பலமுறை ரத்த தானமும்செய்துள்ளார்.

இந்நிலையில் மற்றும் ஒரு புரட்சிகர முடிவை எடுத்துள்ளார் கமல். இந்த முறை தனது மரணத்திற்குப் பிறகு உடலைமருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் தானமாக வழங்கவுள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் "அனாடமி" பிரிவுக்குத் தன் உடலைத் தானம்செய்ய கமல் முடிவு செய்துள்ளார்.

சுதந்திர தினமான வரும் 15ம் தேதி இந்த தானத்தை வழங்குகிறார் கமல்.

அன்று கமல்ஹாசனின் வீட்டில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர்டாக்டர் ரவீந்திரநாத்திடம் இதற்கான சான்றிதழை கமல் வழங்குகிறார்.

அந்தப் பத்திரத்தில், கமலின் மூத்த மகளான ஸ்ருதி சாட்சிக் கையெழுத்து போடுகிறார். அதன் பின்னர்ஏழைகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அன்று கமல் வழங்குகிறார்.

கள்ள நோட்டுக்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து ஆங்கிலப் புத்தகம் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கமல். அந்தப் புத்தகம் அன்றே வெளியிடப்படுகிறது.

மேலும், தன்னுடைய தாய் ராஜலட்சுமி பெயரில் சென்னை அயோத்திக் குப்பம் பகுதியில் புதிய நூலகம் ஒன்றைகமல் நிர்மாணித்துள்ளார். அவரது சொந்தப் பணத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத் திறப்பு விழா வரும் 11ம் தேதி காலை நிடக்கிறது. இதிலும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கிடையே "அன்பே சிவம்" படத்திற்காக தன்னுடைய முகத்தில் வித்தியாசமான கெட்-அப் செய்யும் பணியில்கமல் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் தற்போது தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X