twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி முதியோருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை வழங்கத்திட்டமிட்டுள்ளார்.

    வரும் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளாகும். அன்று அவரது தந்தையின் நினைவு தினமும் கூட.

    இதையொட்டி 7ம் தேதி காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் பிறந்த நாளைக்கொண்டாடுகிறார் கமல். அப்போது ரசிகர்களையும் பொதுமக்களையும் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

    தன்னைச் சந்தித்து வாழ்த்த வரும் ரசிகர்கள், சால்வை மற்றும் மாலைகளுக்குப் பதில் கைத்தறித் துண்டுகள்,சேலைகள், வேட்டிகள் போன்றவற்றை வழங்குமாறு கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த கைத்தறித் துணிகளை முதியோர் இல்லங்களுக்கு வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

    அன்று பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், கமல் நற்பணி மன்றத்தின் 13-வது ஆண்டுதுவக்க விழா மற்றும் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா நடக்கிறது. இதில் பிரளயனின் மாநகர் என்ற நாடகம்நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியின்போது, தனது தாயார் ராஜலட்சுமி பெயரிலான இலக்கிய விருதை சொற்பொழிவாளர் சரஸ்வதிராமநாதனுக்கு கமல் வழங்குகிறார். ரூ. 10,000 ரொக்கப் பரிசு கொண்டது இந்த விருது.

    அதேபோல, தியாகி சீனிவாசன் சமூக சேவை விருது குணசேகரன் என்ற வாலிபருக்கு வழங்கப்படுகிறது. இதுவும்ரூ. 10,000 ரொக்கப் பரிசு கொண்டது.

    இதுதவிர நலிவுற்றவர்களுக்கு ரூ. 1லட்சம் மதிப்புள்ள உதவிகளையும் கமல்ஹாசன் வழங்குகிறார்.

    மக்கள் சக்தி இயக்கத் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, நடிகர் நாசர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிகளில்கலந்து கொள்கின்றனர். இதுபோக, நடமாடும் புத்தக அறிவுக் களம் என்ற மொபைல் நூலகத்தையும் கமல்ஹாசன்தொடங்கி வைக்கிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X