கெளதமி கமல்... தனது அடுத்த படமான தசாவதாரத்தில் நடிக்க ஆசினை கமல் கேட்டது உங்களுக்குத்தெரியும். இப்போது த்ரிஷாவையும் நயனதாராவையும் கேட்டுள்ளாராம். இன்னொருஜோடியாக நடிக்கப் போவது ஜோதிகாவாம்.இவர்கள் தவிர அபிராமி, வித்யா பாலன் ஆகிய கேரளத்துக்கு லட்டுக்களும் வேறுரோல்களில் நடிக்கப் போகிறார்களாம்.இந்தப் படத்தில் 10 கமல்கள். இதில் 4 பேருக்குத் தான் ஜோடி. மற்றவர்கள்பிரம்மச்சாரிகள்.இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருந்தது. ஆனால், அவர்களுக்குதயாரிப்பாளர்கள் கவுன்சில் ரெட் கார்ட் போட்டிருப்பதால் அதை சரி செய்துவிட்டுவரும்படி கூறிவிட்டாராம் கமல். இல்லாவிட்டால் இன்னொரு புரடியூசரைத் தயார்செய்துவிடுவாராம். படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிக்குமார். வில்லன் கேரக்டர் உள்பட கமல் போடப்போகும் பத்து வேடங்கள் குறித்தும் முடிவெடுத்து அதற்கான மேக்கப் டெஸ்டைக்கூட முடித்து விட்டார்களாம். படத்தில் வில்லன் கேரக்டரிலும் நடிக்கும் கமல் படு வித்தியாசமாக வரப்போகிறாராம். இதுவரை இப்படி ஒரு வில்லத்தனத்தை எந்த நடிகரும் செய்ததில்லைஎன்ற ரேஞ்சுக்கு அந்தக் கேரக்டர் இருக்குமாம். படத்தை ரஜினியின் சிவாஜி ரிலீஸ்ஆகும் அதே நாளில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் கமல்.இதற்கிடையே வேட்டையாடு விளையாடு படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டுவிழா சத்யம் தியேட்டரில் நடந்தது.இந்த விழாவுக்கு கமலின் மகள் அட்சராவும் வந்திருந்தார். ஆனால் எல்லோராலும்கவனிக்கப்பட்டவர் கெளதமி தான். கமலுடன் சேர்ந்து சில காலமாக கிசுகிசுக்கப்பட்டுவரும் கெளதமி தனது ஹேட்-ஸ்டைலை எல்லாம் மாற்றிக் கொண்டு, பிரேம்லெஸ்கண்ணாடியில் சும்மா ஜம்மென்று வந்து கமலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தார். விழாவில் மேடையில் இல்லாத பெரும்பாலான நேரம் கெளதமியோடு தான்அமர்ந்திருந்தர் காதல் மன்னன். கெளதமியின் மகள் சுபலட்சுமியும் வந்திருந்தார்.அதே போல படத்தின் ஹீரோயின் ஜோதிகாவும் கச்சிதமாக வந்திருந்தார். அப்பசூர்யாவும் வந்திருக்கனுமே. அவரும் ஆஜராகியிருந்தார்.இந்த விழாவில் சென்னை போலீஸ் கமிஷ்னர் நட்ராஜும் வந்திருந்தது கேசட்டையும்வெளியிட்டது தான் ஆச்சரியம். படத்தில் கமலும் ஒரு போலீஸ் ஆபிசராக(அசிஸ்டெண்ட் கமிஷ்னர் ராகவன்) நடித்துள்ளதால் சந்தோஷமாய் நிகழ்ச்சிக்குவந்தாராம் கமிஷ்னர் சார்.இதில் பேசிய நடிகர் விவேக், அதிமுக-மதிமுக கூட்டணி வாழ்க என்றார். எல்லோரும் என்னடா இது இங்க வந்து அரசியல் செய்றாரே என்று பார்க்க, நான்சொன்னது, அகில உலக திரைப்பட முன்னணி நடிகர் கமல் (அதிமுக), மக்கள் முன்திறமையை வெளிப்படுத்தும் முத்தான இயக்குனர் கவுதம் (மதிமுக) என்றார்.அப்புறம் தான் மூச்சுவிட்டார் கமல்.அப்புறம் கமல் பற்றிய இன்னொரு நியூஸ். பல்லாயிரக்கணக்கானசினிமாக்களுக்குபிரிண்ட் போட்ட ஜெமினி கலர் லேப் இப்போது நொடிந்து போயுள்ளதாம். லேபைபயன்படுத்திய பல தயாரிப்புப் பார்ட்டிகள் பணத்தை செட்டில் செய்யாமல்ஏமாற்றியதால் வந்த வினையாம். இதையறிந்து வேதனைப்பட்ட கமல் அந்தநிறுவனத்துக்காக இலவசமாய் ஒரு படம் செய்து தர முன் வந்துள்ளாராம். தசாவதாரத்துக்குப் பின் கமலின் உதவி அவதாரம் எடுப்பாராம்.முன்பு கேரளாவில் ஆலப்புழா பகுதியில் போட் ஹவுசில் தங்கிய கமல், அதன்அழகில் மயங்கி ரெண்டு போட் ஹவுஸ்களை சொந்தத்தில் வாங்கிப் போட்டார்.இப்போது கொடைக்கானலில் 300 ஏக்கரா யூகலிப்டஸ் தோட்டத்தை வாங்கிப்போட்டுள்ளாராம்.எல்லாத்தையும் சினிமாவிலேயே போடம, இப்படி ஏதாவது வாங்கினாரே..

By Staff

தனது அடுத்த படமான தசாவதாரத்தில் நடிக்க ஆசினை கமல் கேட்டது உங்களுக்குத்தெரியும். இப்போது த்ரிஷாவையும் நயனதாராவையும் கேட்டுள்ளாராம். இன்னொருஜோடியாக நடிக்கப் போவது ஜோதிகாவாம்.

இவர்கள் தவிர அபிராமி, வித்யா பாலன் ஆகிய கேரளத்துக்கு லட்டுக்களும் வேறுரோல்களில் நடிக்கப் போகிறார்களாம்.

இந்தப் படத்தில் 10 கமல்கள். இதில் 4 பேருக்குத் தான் ஜோடி. மற்றவர்கள்பிரம்மச்சாரிகள்.

இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருந்தது. ஆனால், அவர்களுக்குதயாரிப்பாளர்கள் கவுன்சில் ரெட் கார்ட் போட்டிருப்பதால் அதை சரி செய்துவிட்டுவரும்படி கூறிவிட்டாராம் கமல். இல்லாவிட்டால் இன்னொரு புரடியூசரைத் தயார்செய்துவிடுவாராம்.


படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிக்குமார். வில்லன் கேரக்டர் உள்பட கமல் போடப்போகும் பத்து வேடங்கள் குறித்தும் முடிவெடுத்து அதற்கான மேக்கப் டெஸ்டைக்கூட முடித்து விட்டார்களாம்.

படத்தில் வில்லன் கேரக்டரிலும் நடிக்கும் கமல் படு வித்தியாசமாக வரப்போகிறாராம். இதுவரை இப்படி ஒரு வில்லத்தனத்தை எந்த நடிகரும் செய்ததில்லைஎன்ற ரேஞ்சுக்கு அந்தக் கேரக்டர் இருக்குமாம். படத்தை ரஜினியின் சிவாஜி ரிலீஸ்ஆகும் அதே நாளில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் கமல்.

இதற்கிடையே வேட்டையாடு விளையாடு படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டுவிழா சத்யம் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவுக்கு கமலின் மகள் அட்சராவும் வந்திருந்தார். ஆனால் எல்லோராலும்கவனிக்கப்பட்டவர் கெளதமி தான். கமலுடன் சேர்ந்து சில காலமாக கிசுகிசுக்கப்பட்டுவரும் கெளதமி தனது ஹேட்-ஸ்டைலை எல்லாம் மாற்றிக் கொண்டு, பிரேம்லெஸ்கண்ணாடியில் சும்மா ஜம்மென்று வந்து கமலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தார்.


விழாவில் மேடையில் இல்லாத பெரும்பாலான நேரம் கெளதமியோடு தான்அமர்ந்திருந்தர் காதல் மன்னன். கெளதமியின் மகள் சுபலட்சுமியும் வந்திருந்தார்.

அதே போல படத்தின் ஹீரோயின் ஜோதிகாவும் கச்சிதமாக வந்திருந்தார். அப்பசூர்யாவும் வந்திருக்கனுமே. அவரும் ஆஜராகியிருந்தார்.

இந்த விழாவில் சென்னை போலீஸ் கமிஷ்னர் நட்ராஜும் வந்திருந்தது கேசட்டையும்வெளியிட்டது தான் ஆச்சரியம். படத்தில் கமலும் ஒரு போலீஸ் ஆபிசராக(அசிஸ்டெண்ட் கமிஷ்னர் ராகவன்) நடித்துள்ளதால் சந்தோஷமாய் நிகழ்ச்சிக்குவந்தாராம் கமிஷ்னர் சார்.

இதில் பேசிய நடிகர் விவேக், அதிமுக-மதிமுக கூட்டணி வாழ்க என்றார்.


எல்லோரும் என்னடா இது இங்க வந்து அரசியல் செய்றாரே என்று பார்க்க, நான்சொன்னது, அகில உலக திரைப்பட முன்னணி நடிகர் கமல் (அதிமுக), மக்கள் முன்திறமையை வெளிப்படுத்தும் முத்தான இயக்குனர் கவுதம் (மதிமுக) என்றார்.அப்புறம் தான் மூச்சுவிட்டார் கமல்.

அப்புறம் கமல் பற்றிய இன்னொரு நியூஸ். பல்லாயிரக்கணக்கானசினிமாக்களுக்குபிரிண்ட் போட்ட ஜெமினி கலர் லேப் இப்போது நொடிந்து போயுள்ளதாம். லேபைபயன்படுத்திய பல தயாரிப்புப் பார்ட்டிகள் பணத்தை செட்டில் செய்யாமல்ஏமாற்றியதால் வந்த வினையாம். இதையறிந்து வேதனைப்பட்ட கமல் அந்தநிறுவனத்துக்காக இலவசமாய் ஒரு படம் செய்து தர முன் வந்துள்ளாராம்.


தசாவதாரத்துக்குப் பின் கமலின் உதவி அவதாரம் எடுப்பாராம்.

முன்பு கேரளாவில் ஆலப்புழா பகுதியில் போட் ஹவுசில் தங்கிய கமல், அதன்அழகில் மயங்கி ரெண்டு போட் ஹவுஸ்களை சொந்தத்தில் வாங்கிப் போட்டார்.இப்போது கொடைக்கானலில் 300 ஏக்கரா யூகலிப்டஸ் தோட்டத்தை வாங்கிப்போட்டுள்ளாராம்.

எல்லாத்தையும் சினிமாவிலேயே போடம, இப்படி ஏதாவது வாங்கினாரே..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X