தக் லைஃப் ஷூட்டிங் அப்டேட்.. கமலும், சிம்புவும் சேர்ந்து கெட்ட ஆட்டமாம்.. ரகளையா இருக்குமே

சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் ஜூலை மாதம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் அப்டேட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. அதற்கு பதிலாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

Thug Life Kamal Haasan Simbu

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நிறுத்தப்பட்டிருந்த ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.

விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்தார்கள்: இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதேசமயம் சிம்பு இந்தப் படத்தின் இணைந்தார். அவர் தொடர்பான கேரக்டர் இண்ட்ரோ வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் சிம்பு பல காட்சிகளை சிங்கிள் டேக்கிலேயே முடித்துவிடுவதாகவும் கூறப்படுகிரது.

நடனம்: இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு நடந்த ஷூட்டிங்கில் BAR ஒன்றில் கமல் ஹாசனும், சிம்புவும் இணைந்து நடனம் ஆடும் காட்சி படமாக்கப்பட்டதாகவும்; அதனை படக்குழுவினர் ரொம்பவே என்ஜாய் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது கமலும், சிம்புவும் ஒன்னா டான்ஸா அப்போ தியேட்டரில் பார்க்க ரகளையா இருக்குமே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X