"சகலகலாவல்லவன்" முன்பு ஆட சங்கடப்பட்டு, வெட்கப்பட்டு நெளிந்த விஜய்!!

By Siva

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய், கமல் பாட்டுக்கு ஆடச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டு, சங்கோசப்பட்டு நெளிந்த வீடியோ காட்சி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.

உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த 7ம் தேதி தனது 60வது பிறந்நதாளை கொண்டாடினார். தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கி வைத்த அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி அளித்தார்.

பார்ட்டியில் அவர் கேக் வெட்டி அதை கௌதமிக்கும், அவரது மகளுக்கும் அளித்தார். பார்ட்டியில் கலந்து கொண்ட இளைய தளபதி விஜய் வழக்கம் போல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது இளமை இதோ இதோ பாடல் ஒலிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பாட்டுக்கு கமல் பழைய ஸ்டெப்ஸ்களை மறக்காமல் சட் சட்டென்று போட்டு அனைவரையும் கலகலக்க வைத்தார். கூடவே, அவர் விஜய்யின் கையை பிடித்து ஆடுமாறு கூறினார். ஆனால் விஜய்யோ வெட்கத்தில் சும்மா கையை மட்டும் ஆட்டினார்.

பாடலில் வரும் இளமை இதோ இதோ என்ற லைனுக்கு கமல், விஜய்யைப் பார்த்து விரலைக் காட்டி கலகலப்பை ஏற்படுத்தினார். அதேபோல காலேஜு டீன் ஏஜு பெண்கள் என்ற வரி வந்தபோது, அவர் ராதிகாவைக் கையைக் காட்டி கலகலப்பூட்டினார். ஆனால் அவர்களோ கமலைப் பார்த்து கையைக் காட்டி மேலும் கிளுகிளுப்பை ஏற்படுத்தினர்.

விஜய்யின் வெட்கத்தைப் பார்த்த ராதிகாவும் அவரது கையை பிடித்து ஆட வைக்க முயன்றார். ஆனாலும் விஜய் ஆடவில்லை. மாறாக லைட் லைட்டாக கையை, காலை மட்டும் ஆட்டினார். படங்களில் விஜய் சூப்பராக டான்ஸ் ஆடினாலும் பார்ட்டிகள் என்று வந்துவிட்டால் அவருக்கு ஏனோ வெட்கமாகிவிடுகிறது.

விஜய் வெட்கத்தில் நெளியும் வீடியோவை யாரோ ஒரு பிரபலம் வெளியிட அது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X