கமல்ஹாசன் புரபைல் பிக்சரை மாத்திட்டாரே.. பார்த்தீங்களா?
சென்னை: புரபைல் பிக்சரை மாற்றுவதுதான் இப்போது பலருக்கும் முக்கியமான வேலை. செல்பி எடுக்க வேண்டியது, படத்தை மாற்ற வேண்டியது. அந்த வரிசையில் உலக நாயகன் கமல்ஹாசனும் சேர்ந்துள்ளார்.
இருமினால் கூட அதையும் ஸ்டேட்டஸாகப் போடுவதுதான் இன்றைய உலகின் பேஷன். பேஸ்புக் பக்கம் ஒரே ஒரு மணி நேரம் போய் விட்டு வந்தால் போதும் ஏகப்பட்ட சுவாரஸ்யங்களைப் பார்க்கலாம்.
அந்த வகையில் கமல்ஹாசனின் அதிகாரப்பூர்வ பக்கம் என்ற பெயரிலான பேஸ்புக் பக்கம் போனபோது இரண்டு புதிய மாற்றங்களைக் காண முடிந்தது.

மகளும், கமலும்....
தானும் தனது மகள் ஸ்ருதி ஹாசனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு செல்பியை எடுத்து அழகாக தனது புரபைல் மாற்றியுள்ளார் கமல்ஹாசன்.

மற்றொரு படம்...
முதலில் புரபைல் பிக்சரை மாற்றியவர், பின்னர் இன்னொரு செல்பி படத்தையும் போட்டுள்ளார். அதிலும் தந்தையும், மகளும்தான் இருக்கிறார்கள்.

செல்பிக்கள்...
அந்த இரண்டுமே செல்பி படங்களின் அலங்கரிப்புதான். கமல்ஹாசனும், மகள் ஸ்ருதி ஹாசனும் இணைந்து எடுத்த செல்பி படங்கள் அவை.

முறைத்துப் பார்க்கின்றனர்...
அதில் ஒன்றை தனது புரபைல் படமாக கமல்ஹாசன் போட்டுள்ளார். அப்பாவும், மகளும் சற்று முறைத்தாற் போல வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளனர். பார்க்கவே சூப்பராக உள்ளது.

ஸ்டேட்டஸ்...
அதேபோல இன்னொரு அப்பா, மகள் படம். இதை தனது ஸ்டேட்டஸாக போட்டுள்ளார் கமல்ஹாசன்.

சிரித்தபடி போஸ்...
புரபைல் படத்தில் முறைத்துக் காணப்படும் அப்பாவும், மகளும், இதில் தாமரை மலர் போல சிரித்தபடி காணப்படுகிறார்கள்.

கலர்புல்...
புரபைல் படம் கருப்பு வெள்ளையில் உள்ளது. சிரிக்கும் படம் கலர்புல்லாக உள்ளது.


Click it and Unblock the Notifications











