சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!
திடீர் சுகவீனம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கமல்ஹாஸன், நேற்று இரவு வீடு திரும்பினார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் அவரது பிஆர்ஓ தரப்பில், கமலுக்கு உணவுக் கோளாறுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
நேற்று மாலை வரை கமலுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, நேற்று இரவு அவர் உடல் நலத்துடன் வீடு திரும்பியதாக தகவல் வந்துள்ளது.
கமல்ஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு நரம்புத் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டுக்கு திரும்பிய கமல், அங்கிருந்து ‘உத்தம வில்லன்' படத்திற்காக டப்பிங் பேச சென்றுவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











