கமல் ரசிகர்களை கடுப்பாக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு.. சும்மா வச்சு விளாசி வருகின்றனர்!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு நெட்டிசன் ஒருவரின் ட்வீட்டுக்கு போட்ட 'உள்குத்து' கமெண்ட் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

உலகநாயகன் ரசிகர்கள் இயக்குநர் வெங்கட் பிரபுவை கண்டபடி திட்டி மோசமான டைட்டிலில் ஹாஷ்டேக்கையும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு கமல்ஹாசனை கலாய்க்கும் விதமாக அந்த ட்வீட்டை போட்டது ஏன் என கமல் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கமல் பிறந்தநாள்

கமல் பிறந்தநாள்

உலகநாயகன் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாள் நாளை நவம்பர் 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதித்த கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை விக்ரம் படத்தின் கிளான்ஸும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நக்கல் ட்வீட்

நக்கல் ட்வீட்

ரஜினி ரசிகர் ஒருவர், "நாளை (நவம்பர் 7) பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் வெங்கட் பிரபு அவர்களுக்கு முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் & நலமுடன்." என போட்டுள்ள நக்கல் ட்வீட்டுக்கு வெங்கட் பிரபு கொடுத்த பதில் கமெண்ட் தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

உள்குத்து புரிஞ்சிது

உள்குத்து புரிஞ்சிது

"ஹீஹீஹீஹீ.. ரொம்ப நன்றி சார்.. அவ்ளோ பில்டப் பார்த்தானோ தப்பா என்ன டேக் பண்ணீட்டீங்க போலனு நினைச்சேன்!! அப்புறம் தான் உள்குத்து புரிஞ்சுது!! என ரஜினி ரசிகர் போட்ட ட்வீட்டுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த பதில் கமல் ரசிகர்களை மிகவும் கடுப்பாக வெங்கட் பிரபுவை சமூக வலைதளங்களில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

மாநாடு பந்தல்

மாநாடு பந்தல்

"யாருக்கு, யாரின் வாழ்த்துகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என தெரிந்தே பதில் அளித்த உங்கள் உள்குத்தும் & சுயரூபமும் வெளிய தெரிந்துவிட்டது. நல்லா வருவீங்கசார்! உங்கள் #மாநாடு பந்தலை வேறு இடத்தில்போடுங்கள். சென்னை 28க்கு வாழ்த்துகள் தெரிவித்ததை மறந்து உள்குத்திற்கு பலியாகாதீர்கள்." என வெங்கட் பிரபுவை எச்சரித்தும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒரு லட்சம் திட்டு

ஒரு லட்சம் திட்டு

"ஒரு வாழ்த்து(???) சொல்லி ஒரு லட்சம் திட்டு வாங்கி கொடுத்த விஷ மூளை mayavarathaan" என ரஜினி ரசிகர் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நேரடியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறாமல் கமல் பிறந்தநாளை கலாய்க்கும் விதமாக ட்வீட் போட அதை புரிந்தும் புரியாமலும் சிக்கிக் கொண்டார் வெங்கட் பிரபு என கமல் ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

ரஜினி கமல் ரசிகர்கள் சண்டை

ரஜினி கமல் ரசிகர்கள் சண்டை

இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு எதிராக கமல் ரசிகர்கள் ஹாஷ்டேக் போட்டு திட்ட தொடங்க வெங்கட் பிரபுவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக களத்தில் இறங்கி ரஜினி ரசிகர்கள் கமல் ரசிகர்களுடன் ஆபாச சண்டை போட்டு வருகின்றனர். பிரபல இயக்குநரான வெங்கட் பிரபு ரஜினி ரசிகரின் உள்குத்து கமெண்ட்டுக்கு அப்படி ரியாக்ட் பண்ணாமல் இருந்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X