twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலில் கருணாநிதி எனும் பேரிளைஞனை பின்பற்றும் கமல்

    By Siva
    |

    சென்னை: அரசியல் விவகாரத்தில் கமல் ஹாஸன் திமுக தலைவர் கருணாநிதியை பின்பற்றுகிறார்.

    ரஜினியாவது கட்சி துவங்காமல் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் ஆனால் கமல் ஹாஸனோ மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய பிறகும் பிக் பாஸ் 2, படங்கள் என்று தொடர்ந்து கலைத்துறையில் பிசியாக உள்ளார்.

    Kamal follows Karunanidhis style

    நீங்கள் முழு நேர அரசியலுக்கு வருவது எப்பொழுது என்று கமலிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. இந்த கேள்வி குறித்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியதாவது,

    நான் முழு நேர மனிதன். பிற்பாடு தான் கலைஞன். எனக்கு வாழ நேரம் வேண்டும். பிறகு என் வேலையை செய்வேன். அரசியல்வாதியும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவருக்கு என்று ஒரு வாழ்க்கை, அவருக்கு என்று ஒரு தொழில் இருந்திருக்க வேண்டும். அதை எல்லாம் விட்டுவிட்டு தியாகம் செய்வது என்பது வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் முன் அடி எடுத்து வைத்தாலே தங்கள் வாழ்க்கை பாழாகிவிடும் என்று நினைத்தவர்கள் செய்த தியாகம். இப்போ அது தேவையில்லை என்றார்.

    சரி இதற்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கலாம். என்ன தான் தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தனக்கு அடையாளம் கொடுத்த சினிமா துறையை மறக்காமல் பங்களித்து வந்தவர் கருணாநிதி.

    92 வயது வரை இளைஞனுக்குரிய துடிப்புடன் கலைச்சேவை செய்தவர் கருணாநிதி. நான் அரசியல் தலைவராகி விட்டேன் சினிமாவுக்கு நேரம் இல்லை என்று அவர் ஒருபோதும் கூறியது இல்லை. கமலும் கருணாநிதியை போன்றே கலைச்சேவையுடன் சேர்த்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்.

    English summary
    Actor turned politician Kamal Haasan is following DMK supremo Karunanidhi's style when it comes to serving people along with their work in film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X