சூர்யாவுக்காக ஒரே மேடையில் ஒன்றிணையும் கமல்ஹாசன், அமீர்கான்.. ’கருப்பு’ படத்துக்கு முன்பே செம ட்ரீட்!
சென்னை: கடந்த ஆண்டு கங்குவா, இந்த ஆண்டு ரெட்ரோ என அடுத்தடுத்து சூர்யா நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாவதே ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்தாலும், இன்னமும் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை சூர்யா பெறவில்லையே என்கிற ஏக்கம் அவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அடுத்ததாக 'கருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் சூர்யாவை பார்க்க முடியும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதற்கு முன்பாகவே கூடிய சீக்கிரமே மெகா ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.
மேலும், நடிகர் சூர்யாவுக்காக ஒரே மேடையில், கமல்ஹாசன் மற்றும் அமீர்கான் பங்கேற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிச்சயம் அந்த நிகழ்ச்சி சூர்யா ரசிகர்களுக்கு சந்தோஷ்டத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல நல்ல விஷயங்களை சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி செய்து வருகின்றனர். அதிலும், சூர்யா அகரம் அறக்கட்டளையை ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகிறதாம்.
15 ஆண்டுகளாக கல்வி சேவை: தமிழ் நாட்டில் மாணவர்கள் நலனில் பெரும் அக்கறையுடன் சூர்யா மற்றும் விஜய் செயல்பட்டு வருகின்றனர். 10ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெறும் மாணவர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறார். நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலமாக கடந்த 15 வருடங்களாக பல மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி பெரும் சேவையை செய்து வருகிறார். அந்த விழாவை பிரம்மாண்டமாக சாய் ராம் கல்லூரியில் கொண்டாட போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமலும் அமீர்கானும்: ரஜினிகாந்தின் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அந்த படத்தில் நடித்துள்ள அமீர்கான் இந்த மாத இறுதியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், கமல்ஹாசன் உடன் சேர்ந்து சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் 15 ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் மூலமாக சினிமாவில் சம்பாதிக்கும் நடிகர்கள் திரும்பவும் மக்களுக்கு ஒரு ரூபாய் உதவி செய்தால் கூட அவை பாராட்டப்பட்டு வரும் நிலையில், பல ஆண்டுகளாக கல்வி சேவை செய்து வரும் சூர்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர். பிரம்மாண்ட விழா நிச்சயம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு கருப்பு: கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரேஸில் விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களுடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள கருப்பு திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவிலேயே அந்த படம் தொடர்பான அப்டேட்களையும் அகரம் விழாவில் சூர்யா அறிவிப்பார் என தெரிகிறது.
நான் தியேட்டரிக்கல் லாபம்: சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டே லாபம் பார்த்த சூர்யாவுக்கு ரெட்ரோ படத்தையும் நான் தியேட்டரிக்கலாக மிகப்பெரிய லாபம் ஈட்டக்கூடிய படமாக மாற்ற முடிந்தது என்கின்றனர். அடுத்ததாக வெளியாகவுள்ள கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் சாதனை படைக்கும் என்றும் படம் சிறப்பாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











