கல்கி 2ம் பாகத்தில் இணைந்த கமல்ஹாசன்.. ஆண்டவரை ஆரத்தழுவி வரவேற்ற அஸ்வத்தாமா அமிதாப் பச்சன்!
ஹைதராபாத்: நடிகையர் திலகம் படத்தை இயக்கி கீர்த்தி சுரேஷ் வழியாக மீண்டும் சாவித்ரி தேவியை கண் முன் காட்டிய இயக்குநர் நாக் அஸ்வின் பிரபாஸை கர்ணனனாகவே காட்டி கலக்கிய கல்கி 2898 ஏடி படத்தில் கமல்ஹாசனை மெயின் வில்லனாகவும் மாற்றியிருந்தார்.
ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், ஆண்டவரின் ஆட்டமே தனி ஆட்டம் தான் என ரசிகர்களை கதிகலங்க வைத்து விட்டார். இந்நிலையில், கல்கி படத்தின் 2ம் பாகம் உருவாகி வரும் நிலையில், கமல்ஹாசன் தனது ஷெட்யூலுக்காக இணைந்துள்ளார்.

ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கப் போகும் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒரு பக்கம் டிரெண்டாகி வர அடுத்ததாக அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், இருவரும் செட்டில் சந்தித்துக் கொண்ட போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம்: ராஜமெளலி உள்ளிட்ட இயக்குநர்கள் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை டார்கெட் செய்து படங்களை இயக்கி வரும் நிலையில், நாக் அஷ்வின் ஒரு படி மேலே சென்று விஷ்ணு பகவானின் 10வது அவதாரமான கல்கி அவதாரக் கதையே காட்டுகிறேன் என உருவாக்கிய படம் தான் கல்கி 2898 ஏடி. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

கல்கி 2 செட்டில் இணைந்த கமல்: இன்பநிதி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தின் அட்டகாசமான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்ததாக கல்கி 2ம் பாகத்தில் நடிக்க ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கே அமிதாப் பச்சன் மற்றும் கமல் சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆரத்தழுவிய அமிதாப் பச்சன்: 83 வயதாகும் அமிதாப் பச்சன் தான் கல்கி 2898 ஏடி படத்திலேயே ஹீரோவாக காட்சியளித்தார். அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அவர் கம்பீரமாக நடித்த நிலையில், 2ம் பாகத்தில் அவருக்கும் கமலுக்கும் இடையேயான மோதல் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி 2ம் பாகம் செட்டுக்குள் கமல் வந்தவுடனே இருவரும் சந்தித்துக் கொண்டு ஆரத்தழுவிய காட்சிகள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











