107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக்கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்: கமல்
சென்னை: 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளதை கமல் ஹாஸன் பாராட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கார்ட்டோ சாட்-2 செயற்கைகோள் மற்றும் 103 செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை பிரதமர் மோடி மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழியபாரத மணித்திருநாடு.
Comments


Click it and Unblock the Notifications