இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள்: பா. ரஞ்சித், மாரியை வாழ்த்திய கமல்

By Siva

சென்னை: பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு பா. ரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார் கமல் ஹாஸன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான பரியேறும் பெருமாள் படத்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பா. ரஞ்சித் தயாரித்த இந்த படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்குமாறு ரசிகர்களே கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் படத்தை பார்த்த கமல் ஹாஸன் மாரி செல்வராஜ், ரஞ்சித்தை சந்தித்து பாராட்டியுள்ளார்.

 கமல்

கமல்

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள் என்று கமல் ஹாஸன் பா. ரஞ்சித், மாரி செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். அவர் மாரி செல்வராஜ், ரஞ்சித்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மக்களின் ஆதரவை பார்த்து மகிழ்ச்சியில் உள்ள அவர்களுக்கு கமலின் வார்த்தைகள் புது தெம்பு அளித்துள்ளது.

பரியேறும் பெருமாள்

என் நண்பர்கள் பலரும் போன் செய்து பரியேறும் பெருமாள் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதால் படத்தை பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி, இந்த முயற்சியை விட்டுவிடாதீர்கள் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். புது முயற்சிகளை வரவேற்கத் தவறாதவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்

விஜய்

முன்னதாக பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ கதிருக்கு விஜய் போன் செய்து வாழ்த்தினார். சீனியர் நடிகரான விஜய் வாழ்த்திய சந்தோஷத்தை அடக்க முடியாமல் ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் கதிர். இந்நிலையில் கமல் ஹாஸனும் வாழ்த்தியுள்ளார். புதிய முயற்சியை சீனியர்கள் வரவேற்பது நல்ல விஷயம்.

 திருமாவளவன்

திருமாவளவன்

கல் நெஞ்சம் படைத்தவனைக் கூட சிந்திக்க வைக்கும், மனம் மாற வைக்கும். அதற்கான அத்தனை ஆற்றலும், ஆளுமையும் இந்தப் படத்தில் இருக்கிறது என்று பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X