என்னை கவர்ந்த தம்பிகளுக்கு வாழ்த்துகள்.. தனது அடுத்த பட இயக்குநர்களை புகழ்ந்த கமல் ஹாசன்

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தன்னுடைய படத்தை இயக்கவிருக்கும் அன்பறிவ் மாஸ்டர்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கமல்.

கமல் ஹாசன் என்றால் குழந்தை முதல் பெரியவர்வரை தெரியும். தனது 8ஆவது வயதிலேயே கேமரா முன்பு நின்று, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கொஞ்சம் மழலை முகத்துடன் எந்தவித பதற்றமுமின்றி நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் பயணப்பட்ட அவர் முதலில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார். பிறகு கே.பாலசந்தர் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan Convey His Birthday Wishes To Anbariv

பல்கலைக்கழகம்: தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

ரீ என்ட்ரி: அப்படிப்பட்ட கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழல் சாதகமாக அமையவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார்.

அன்பறிவ்: இந்தப் படம் தவிர்த்து யாரும் எதிர்பார்க்காதவகையில் இன்னொரு படத்திலும் நடிக்கிறார் கமல் ஹாசன். ஆம் கோலிவுட்டில் சண்டை பயிற்சியாளர்களாக கலக்கிவரும் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். ஏனெனில் இளம் படைப்பாளிகள் மீது கமல் ஹாசன் வைத்திருக்கும் உச்சபட்ச நம்பிக்கையைத்தான் இது காட்டுவதாக ஒட்டுமொத்த திரைத்துறையும் பேசுகிறது.

பிறந்தநாள் வாழ்த்து: இந்தச் சூழலில் அன்பறிவ் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் கமல் ஹாசன், "திறமையாலும், அர்ப்பணிப்பாலும் உங்களையும் என்னையும் கவர்ந்த அன்புத் தம்பிகள் அன்பறிவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். கமல் ஹாசன் இப்போது நடித்துவரும் தக் லைஃப் படத்துக்கு இவர்கள்தான் சண்டை பயிற்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X