இந்தியன் 2 படத்துக்காக கமல் ஹாசன் பெற்ற சம்பளம் இவ்வளவா?.. ஆண்டவர் செம ஃபார்ம்போல

சென்னை: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.அதுமட்டுமின்றி அவர் வில்லனாக நடித்திருக்கும் கல்கி படமும் இன்று வெளியாகியிருக்கிரது. இந்தச் சூழலில் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இந்திய சினிமாவில் யாராலும் மறுக்க முடியாதது. சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததால் என்னவோ அவருக்கு சினிமாவில் தெரியாத ஜானரே இல்லை. குழந்தை நட்சத்திரம், உதவி நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுபவர் அவர்.

Indian 2 Kamal haasan Kalki 2

சினிமா பல்கலைக்கழகம்: கமல் ஹாசன் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பமோ இல்லை புதிய கருவியோ வந்தால் அதனை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்துவதும் அவரே. அதனால்தான் அவரை சினிமாவில் நடமாடும் பல்கலைக்கழகம் என்கிறார்கள். மேலும் தற்கால இயக்குநர்கள், நடிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.

மஞ்சும்மல் பாய்ஸ்: அதற்கு சமீபத்திய உதாரணம்தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பொடுவல் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர். 1991ஆம் ஆண்டு குணா படம் எடுக்கப்பட்ட குகையை மையமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை உருவாக்கியிருந்தார். அந்தப் படம் கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் வசூல் மழை பொழிந்துவருகிறது. அதற்கு காரணம் கமல் ஹாசனும், குணாவும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலனும் பாடல்தான்.

கண்மணி அன்போடு காதலன்: வழக்கமான மெலோடியாக இல்லாமல் கமல் ஹாசன் ஐடியா கொடுக்க ஒரு கடிதம் எழுதுவது போல் அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்கள். அந்தப் பாடல் இப்போதுவரை ஃபேமஸ். மஞ்சும்மல் பாய்ஸில்கூட அந்தப் பாடல் வரும்போது திரையரங்கில் இருந்த ஒட்டுமொத்த பேரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த அளவுக்கு பாடல் இன்றுவரை கனெக்ட் ஆகியிருக்கிறது. இப்படி பல புதுமைகளை அப்போதே புகுத்தி இன்றுவரை தனி ஆளுமையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார் கமல் ஹாசன்.

இந்தியன் 2: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்த மாதம் 12ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் இந்தியன் 2வுக்காக கமல் ஹாசன் பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தியன் 2வுக்காக அவர் மொத்தம் 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X