எந்திரன் படத்திலிருந்து விலக காரணம் என்ன?.. கமல் ஹாசன் பகிர்ந்த சீக்ரெட்.. இதுதான் காரணமா?

சென்னை: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கும் சூழலில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் எந்திரன் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து கமல் ஹாசன் ஓபனாக பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த கமல் ஹாசன் இடையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கவனம் செலுத்தினார். ஆனால் உலக நாயகன் எதிர்பார்த்தபடி அரசியல் களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டுவரும் அவர், மீண்டும் சினிமாவை கவனிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தனது ரீ என்ட்ரியை தரமாக கொடுத்தார் அவர்.

Rajinikanth Kamal Haasan Indian 2 2

இந்தியன் 2: படம் மெகா ஹிட்டானதை அடுத்து; நின்றுபோன இந்தியன் 2 படத்தின் பணிகளும் தூசு தட்டப்பட்டன. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் இந்தியன் 2 ஷூட்டிங் நின்று போயிருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் இந்தியன் 2வில் நடிக்க ஆரம்பித்தார். ஷங்கரும் முழுமூச்சாக இறங்கி வேலை செய்தார். இதில் கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இந்த மாதம் ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மும்முரமாக நடந்தது. கமல் ஹாசனும் இந்தப் படத்துக்காக கடுமையாகவே உழைத்திருக்கிறார். ஒருவழியாக ஷூட்டிங் மற்றும் இதர பணிகள் முடிந்து படமானது இந்த மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்தியன் படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் கமலின் ரசிகர்களோ; இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று உறுதிபட கூறினர்.

பொய்த்துப்போன நம்பிக்கை?: ஆனால் அவர்களது நம்பிக்கை பொய்த்துப்போகும்படி அமைந்துவிட்டது ட்ரெய்லர். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர். இது என்ன இந்தியன் 2வா இல்லை தசாவதாரம் 2வா? இவ்வளவு கெட்டப்புகளில் வருகிறாரே; முக்கியமாக கமல் ஹாசனுக்கு மேக்கப்பும் சரியில்லை என்று ஓபனாகவே பேசிவருகின்றனர். ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் கமல் ரசிகர்களை மட்டுமின்றி படக்குழுவையும் அப்செட்டாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

எந்திரன்: இதற்கிடையே ரஜினிகாந்த்தை வைத்து ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் முதலில் கமல் ஹாசன் நடிக்க வேண்டியது. படத்துக்கு ரோபோ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி ஜிந்தா நடிப்பதாக இருந்தது. அதற்கான ஃபோடோஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கமல் ஹாசன் அந்தப் படத்திலிருந்து வெளியேற; ரஜினிகாந்த்தை வைத்து எந்திரன் படத்தை இயக்கி மெகா ஹிட்டடித்தார் ஷங்கர்.

கமல் ஹாசன் சொன்ன காரணம்: இந்நிலையில் ரோபோ (எந்திரன்) படத்திலிருந்து தான் ஏன் விலகினேன் என்பது குறித்து கமல் ஹாசன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் இதுகுறித்து கூறுகையில், "எந்திரன் படத்தில் நடிக்க முதலில் ஷங்கர் என்னை அணுகினார். ஆனால் அப்போது கால்ஷீட், அப்போதைய மார்க்கெட், சம்பளம் போன்ற காரணங்களால் நான் விலகிவிட்டேன். அதனையடுத்து அந்தப் படத்தை ஷங்கர் விட்டுவிடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ரஜினியை வைத்து எடுத்து மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துவிட்டார்" என்றார். முன்னதாக இந்தியன் படத்தின் கதையில் முதலில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டியதிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X