சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா.. 40 வருடங்கள் நிறைவு.. வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
சென்னை: கன்னட சூப்பர் ஸ்டாரின் மூத்த மகனான சிவராஜ்குமார் தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கவிருக்கும் அவர் திரைத்துறையில் 40ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதனையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
கர்நாடக திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார். மேலும் அந்த மாநிலத்தின் முதலமைச்சராகவும் அவர் இருந்தார். சந்தன கடத்தல் வீரப்பன்கூட ராஜ்குமாரை சில மாதங்கள் கடத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமாருக்கு மொத்த இரண்டு மகன்கள். மூத்தவர் சிவராஜ்குமார், இளையவர் புனித் ராஜ்குமார். தந்தையை போலவே கர்நாடக திரையுலகிலும், மாநிலத்திலும் தங்களுக்கென பெயரையும், செல்வாக்கையும், புகழையும் நிறைய பெற்றவர்கள் இரண்டு பேரும்.
அண்ணனும், தம்பியும் நடிகர்கள்: அதேபோல் இரண்டு பேருமே சாண்டல்வுட்டில் நடிகர்களாகவும் வெளிச்சம் பெற்றவர்கள். புனித் ராஜ்குமாரை ரசிகர்கள் அப்பு என்றும், சிவராஜ்குமாரை சிவாண்ணா என்று அழைப்பதுண்டு. இருவருமே சென்னையில் பிறந்தவர்கள் என்பதும்; தமிழ் மிக அருமையாக பேசுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் அவர்களுக்கென்று ரசிகர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. புனித் ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சிவராஜ்குமார் கரியர்: சிவராஜ்குமாரை பொறுத்தவரை கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க, தனக்கு ஒரு நோய் இருக்கிறது. ஆனால் அது என்ன நோய் என்று தெரியவில்லை. அதற்காக அமெரிக்கா செல்கிறேன் என்று கூறிவிட்டு; அங்கு சென்று சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார். இப்போது உடல்நலம் தேறியிருக்கும் சிவாண்ணா முன்புபோல் ஆக்டிவ்வாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது.
கமலுடனான பந்தம்: கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் சிவராஜ்குமார். தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியபோதுகூட, 'ஒருமுறை எனது வீட்டுக்கு கமல் சார் வந்திருந்தார். அப்போது அவரை ஒருமுறை கட்டி அணைத்தேன். அதிலிருந்து இரண்டு நாட்கள் குளிக்கவே இல்லை' என கூறி தனது ஃபேன் பாய் மொமன்ட்ஸை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் அந்த விழாவில் தமிழிலிருந்துதான் கன்னட மொழி பிறந்தது என கமல் சிவராஜ்குமாரை பார்த்து பேச அது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
சிவாவின் சப்போர்ட்: கமலின் அந்தப் பேச்சுக்கு கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலானோர் கண்டனம் தெரிவிக்க; கமலுக்கு சிவராஜ்குமார் சப்போர்ட் செய்தார். அதுமட்டுமின்றி, கமல்ஹாசனை இந்த விஷயத்தில் விமர்சனம் செய்பவர்கள் கன்னட மொழிக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என சாட்டையடி கேள்வியையும் எழுப்பினார். இந்நிலையில் அவர் திரைத்துறையில் 40ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதனையொட்டி கமல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
கமலின் வீடியோ: கன்னடத்தில் பேசி வீடியோ வெளியிட்டிருக்கும் கமல், "சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி. ராஜ்குமார் எனக்கு காட்டிய அன்பு என்பது எதிர்பாராத அன்பு. சிவராஜ்குமாரை பொறுத்தவரை 40 அருடங்கள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. இன்று மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிறார். இனியும் சாதிக்கவிருக்கிறார். இவையெல்லாம் எனக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











