சுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்

கமல்ஹாசன் நியூயார்க்கில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்றார்.

Recommended Video

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கமல்

சென்னை: நடிகர் கமல் ஹாசன் அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக பங்கேற்றார்.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தன் மகள் ஸ்ருதிஹாசனுடன் கலந்து கொண்டார்.

Kamal Haasan honoured in New York!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதனையடுத்து இந்திய சுதந்திரத்தை போற்றும் வகையில் நேற்று இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி நியூயார்க்கின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

அப்போது மாடிசன் அவென்யூவில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றுகூடி அணிவகுப்பில் பங்கேற்றனர். அதில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மார்ஷலாக நடிகர் கமல்ஹாசன் கௌரவிக்கப்பட்டார். அவருடன் நடிகை ஸ்ருதிஹாசனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கமல் பங்கேற்றார்.

விஸ்வரூபம் 2 திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X