»   »  நான் எப்பவுமே கமலிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பேன்: ரஜினி

நான் எப்பவுமே கமலிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பேன்: ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் மாதிரி ஒரு கோபக்காரரை நான் பார்த்ததே இல்லை. அவருடைய கோபத்தில் நீங்கள் 10 சதவீதம் தான் பார்த்திருக்கிறீர்கள், நான் 100 சதவீதம் பார்த்திருக்கிறேன். அதுக்காக தான் நான் அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன் அண்மையில் காலமானார். இந்நிலையில் சென்னை காமராஜர் அரங்கில் அஞ்சலி கூட்டம் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ரஜினி கூறுகையில்,

சந்திர ஹாஸன்

சந்திர ஹாஸன்

என்னுடைய நண்பர் கமல் அவர்களுக்கு மூன்று தகப்பனார்கள். முதல் தகப்பனார் அவரை பெற்றவர். மற்ற 2 தகப்பானர்கள் சாருஹாஸன் அண்ணா, சந்திரஹாஸன் அண்ணா.

சாருஹாஸன்

சாருஹாஸன்

கமலை வளர்த்தவர் சாரு அண்ணா. அவரை ஆளாக்கியவர் சந்திரஹாஸன் அவர்கள். நான் அவரை இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். சாரு அண்ணாவோட எனக்கு நிறைய பழக்கம் இருக்கு. நிறைய பழகியிருக்கிறேன்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

சந்திர ஹாஸன் அவர்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையை சொல்லணும்னு சொன்னா பொருளாதாரத்தில் இப்ப வருகிற ஆர்டிஸ்டுகளை ஒப்பிட்டால் கூட அவர்கள் வச்சிருக்கிற பணம் கூட என் நண்பர் கமல் வச்சுக்கல. கமலுக்கு பணம் சேர்த்துக் கொடுத்தது சந்திர ஹாஸன் அண்ணன்.

கமல்

கமல்

கமல் பணம் பற்றி கவலைப்படவில்லை. இனிமேல் அவர் இருக்கிற பணத்தை எப்படி காப்பாத்திக்கப் போகிறார், சம்பாதிக்கப் போகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கோபம்

கோபம்

கமல் ஹாஸன் மாதிரி ஒரு கோபக்காரரை நான் பார்த்ததே இல்லை. அவருடைய கோபத்தில் நீங்கள் 10 சதவீதம் தான் பார்த்திருக்கிறீர்கள், நான் 100 சதவீதம் பார்த்திருக்கிறேன். அதுக்காக தான் நான் அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பேன்.

சமாதானம்

சமாதானம்

கமலை சமாதானப்படுத்துவதில் அன்பாக சொல்வார் சாரு அண்ணா, கொஞ்சம் அதட்டி சொல்வார் சந்திரா அண்ணா. இப்ப எல்லா பொறுப்பும் சாரு அண்ணாவிடம் தான் உள்ளது.

பாலசந்தர்

பாலசந்தர்

அனந்து, பாலசந்தர் சார், சாரு ஹாஸன், சந்திரஹாஸன் ஆகிய நான்கு பேர் தான் கமல் ஹாஸனின் உயிர்கள். அதில் 3 பேர் இல்லை. ஆனால் அவர்களின் ஆத்மா எப்பொழுதுமே அவருடன் இருக்கும். நாங்க எல்லாம் இருக்கோம் கமல் என்றார் ரஜினி.

English summary
Rajinikanth attended Chandrahaasan's memorial meet held in Chennai today. He said that he has never ever seen an angry person like Kamal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil