'கடவுளைச்' சந்தித்தார் மாதவன்... !
சென்னை: விஜய் அவார்ட்ஸ் விழாவுக்குப் போனேன். அங்கு எனது கடவுள் கமல் சாரை சந்தித்தேன்... என்று டிவிட் செய்துள்ளார் நடிகர் மாதவன்.
சமீபத்தில் சென்னையில் விஜய் அவார்ட்ஸ் விழா நடந்தது. அதில் கமல்ஹாசன், ஷாருக்கான், விஜய் உள்ளிட்ட பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
ஷாருக்கானுக்கு செவாலியே சிவாஜி விருது வழங்கப்பட்டது.அந்த விருதை கமல்ஹாசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி குறித்து டிவிட் செய்துள்ளார் நடிகர் மாதவன். அதில்தான் கமல்ஹாசனை கடவுள் என்றுவர்ணித்துள்ளார் அவர்.

கடவுளுடன் சந்திப்பு
தனது டிவிட்டில், விஜய் அவார்ட்ஸ் விழா சிறப்பாக இருந்தது. சிறிய இடைவேளைக்குப் பிறகு எனது கடவுள் கமல்ஹாசனை சந்தித்தேன்.

டீன் ஏஜர் போல உணர்கிறேன்
அவருடனான சந்திப்புக்குப் பின்னர் ஒரு டீன் ஏஜ் பையன் போன்ற உணர்வு வந்துள்ளது.

பாதி இருந்தா கூட போதும்
கமல் சார், ஷாருக் கான் ஆகியோரிடம் உள்ள தொழில் அர்ப்பணிப்பு, ஈடுபாடு ஆகியவற்றில் பாதியாவது எனக்கு இருந்தால் கூட போதும் என்று கூறியுள்ளார் மாதவன்.

3 படங்களில் நடித்தவர்கள்
கமல்ஹாசனுக்கும், மாதவனுக்கும் இடையே நீண்ட கால நட்பு உள்ளது. கமல்ஹாசனின் நள தமயந்தி படத்தில் முதலில் மாதவன் நடித்தார். பின்னர் அன்பே சிவம், மன்மதன் அம்பு என இவர்களின் நடிப்பு கூட்டணி தொடர்ந்தது.

'ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்' ரசிப்பாரா...?
அன்பே சிவம் என்று சொன்ன கமலையே கடவுளாக்கி விட்டார் மாதவன். இதை 'ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்' ரசிப்பாரா என்பதுதான் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











