வெறும் மணிரத்னம் இல்லை அஞ்சரை மணிரத்னம்.. இரவெல்லாம் அதே நினைப்பு..கோபத்தில் கமல் வைத்த பட்டம்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. ஜிங்குச்சா பாடலின் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் நாயகன் கமல் ஹாசன் மிகவும் வெளிப்படையாக இயக்குநர் மணிரத்னத்தை ஜாலியாக கலாய்த்து பேசியுள்ளார். மேலும், கண் கலங்கும் வகையில் தனது குருநாதரை நினைவுப்படுத்தி பேசிய படக்குழுவினரை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் படத்தின் மூலம் கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். தக் லைஃப் படத்தின் ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற நடிகர் அசோக் செல்வன் கமல் படத்தில் நடிப்பது கனவாக இருந்தது என தெரிவித்தார்.

kamal-haasan-mocks-mani-ratnam-at-the-thug-life-movie-song-relase-function

அசோக் செல்வன் பேச்சு: இந்நிகழ்வில் பேசிய நடிகர் அசோக் செல்வன், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் நடிக்க பெரிய காரணம் ஒன்றும் இல்லை. கமல் சார், மணி சார், ரஹ்மான் சார் படங்களில் நடிக்க வேண்டும் என்பது பெரிய ஆசை. அது தற்போது நிறைவேறியிருக்கிறது. நாம யார் என்பதை முடிவு செய்வது பார்க்கும் படங்கள், படிக்கும் புத்தகங்கள் தான். சினிமா நமது கலாச்சாரத்தோடு கலந்திருக்கிறது. இவர்களை பார்த்துதான் வளர்ந்திருக்கிறோம். இதுபாேன்ற படத்தில் கமல் சாருடன் இணைந்து நடிக்கவும் அவரை பக்கத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுபோன்று இனி அமைய வாய்ப்பில்லை. வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அசோக் செல்வன் தனது இடத்தில் அமர்ந்தார்.

இங்கிலீஸ் தெரியாது: பின்னர், பேசிய மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சாரி எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழிலேயே பேசுகிறேன் என தெரிவித்தார். அப்போது மேடையெங்கும் சிரிப்பலையானது. தக் லைஃப் பட விழாவில் ஜோஜூ ஜார்ஜ் தக் லைஃப் செய்தார். பின்னர் பேசிய கமல்ஹாசன். சிரிப்பலையை ஏற்படுத்தினார். இதிலும், குறிப்பாக இயக்குநர் மணிரத்னத்தை இந்த மாதிரி வாறுவார் என்றும் அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். சிம்பு, த்ரிஷா எல்லோரும் சிரித்து விட்டனர்.

kamal-haasan-mocks-mani-ratnam-at-the-thug-life-movie-song-relase-function

அஞ்சரை மணி மணிரத்னம்: அப்போது பேசிய கமல், நாயகன் படத்தில் இருந்து மணிரத்னத்தை பார்க்கிறேன். இன்று வரை மாறவில்லை. இவருக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். கோபத்தில் வைத்தது தான். ஆனால், சொல்லலாம். ஒன்றும் தப்பில்லை. அவர் வெறும் மணிரத்னம் இல்லை; 5.30 மணி மணிரத்னம். எல்லோரும் எனக்கு பட்டம் கொடுப்பாங்க ஆனால், நான் அவருக்கு இந்த படத்தில் இருந்து பட்டம் கொடுக்கிறேன் என கமல் கூறியபோது மேடையே சிரிப்பலையால் அதிர்ந்தது. அருகில் இருந்த நடிகர்களும் சிரிக்க தொடங்கிவிட்டனர். பிரம்ம முகூர்தத்தில் காலையில் 5 மனிக்கு வருவதுபோல் இரவெல்லாம் அதே நினைவோடு இருப்பதால் தான் அவர் காலையில் சீக்கிரம் வந்து விடுகிறார். இதற்காக அவரிடம் மறைமுகமாக சாரி கேட்டு கொள்கிறேன் என்றார். மேலும், மணிரத்னத்தை பற்றி நன்கு தெரியும் அதனால் தான் நாயகனுக்கு பிறகு தக் லைஃப் படத்தில் நடிக்க காரணமாக இருந்தது. சினிமா மீது அதீக காதல் கொண்டிருப்பவர் மணிரத்னம். பேசாமல் சாதிக்க கூடியவரில் இவரும் ஒருத்தர். அப்போதில் இருந்தே படப்பிடிப்புக்கு 5.30 மணிக்கு வந்திடுவது ஆச்சரியத்தை தருகிறது. நடிகர்களுக்கு முன்பே இயக்குநர் வருவது வியப்புதான் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X