ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?: கமல் ஹாஸன் பதில்

By Siva

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி கமல் ஹாஸன் கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டத்தோடு கூட்டமாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தை சிங்கிள் ஹீரோவாக நடி நண்பா அப்பொழுது தான் சினிமாவில் நிலைத்து நிற்கலாம், உனக்கும் ஒரு பெயர் கிடைக்கும் என்று அறிவுரை வழங்கியவர் உலக நாயகன் கமல் ஹாஸன். அவரது அறிவுரையை ஏற்று ரஜினி தனி ஹீரோவாக படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் ஆனது அனைவரும் அறிந்ததே.

ரஜினியும், கமல் ஹாஸனும் எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் அதைப் பற்றி எழுதாமல் விஷயத்திற்கு வருவோம்.

அரசியல்

அரசியல்

கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து இல்லை வம்படியாக இழுத்து வர கடும் முயற்சி நடந்து வருகிறது.

ரஜினி

ரஜினி

நீங்கள் என்ன செய்தாலும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்பது போன்று உள்ளது ரஜினியின் நடவடிக்கைகள்.

விடமாட்டோமே

விடமாட்டோமே

ரஜினி என்ன தான் அரசியலில் ஆர்வம் காட்டாவிட்டாலும் அவரை அவர் வழியான தனி வழியில் விடாமல் அரசியலுக்கு அழைத்து வந்தே தீருவோம் என்று சிலர் செயல்படுகிறார்கள்.

வருவாரா?

வருவாரா?

ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ இந்த கேள்வியை நீங்கள் ரஜினியிடம் தான் கேட்க வேண்டும். நான் எப்படி பதில் கூற முடியும் என்று நண்பரை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

அப்போ நீங்க?

அப்போ நீங்க?

சரி ரஜினி சார் அரசியலுக்கு வருவாரா என்று தான் கூற மாட்டேன் என்கிறீர்கள் நீங்களாவது வருவீர்களா என்று கேட்டால் ஆளை விடுங்க சாமி என்கிறார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X