அமரன் சக்சஸ் மீட்.. முதலமைச்சரும் வருகிறார்?.. செம பிளானில் கமல்.. சிவகார்த்திகேயன் காட்டில் மழைதான்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் செம ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இதுவரை உலகளவில் 350 கோடி ரூபாய் வசூலை படம் நெருங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அமரன் படத்தின் வெற்றி விழாவை படு பிரமாண்டமாக கொண்டாட தயாரிப்பாளர் கமல் ஹாசன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சிவகார்த்திகேயன் கடைசியாக அமரன் படத்தில் நடித்திருந்தார். ரங்கூன் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். அமரனுக்கு முன்பாக எஸ்கே நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. இதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது.

ஹாட்ரிக் வெற்றி: முக்கியமாக அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்ற ஆவல் அவரது ரசிகர்களிடம் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. படத்தின் மேக்கிங், திரைக்கதை, ஜிவி பிரகாஷின் இசை என அத்தனை டிப்பார்ட்மென்ட்டிலும் படம் பக்காவாக இருந்ததாக ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள். அதுமட்டுமின்றி எஸ்கேவின் கரியர் இனி அமரனுக்கு முன், அமரனுக்கு பின் என பிரிக்கப்படும் என்றும் திரைத்துறையினர் கூறுகிறார்கள்.
சாய் பல்லவியின் ஸ்கோரிங்: அதற்கேற்றபடிதான் சிவகார்த்திகேயனின் நடிப்பும் படத்தில் இருந்தது. அதேபோல் இந்து ரெபெக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியும் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டார். படத்தின் அடிநாதமான காதல் காட்சிகளில் சாய் பல்லவி - சிவகார்த்திகேயனின் கெமிஸ்ட்ரி அவ்வளவு அருமையாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இதன் காரணமாக கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்ற பெயரை இந்த ஜோடி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூலில் சாதனை: படம் இப்படி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் வசூலிலும் படம் சக்கைப்போடு போட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விஜய்யின் GOAT படத்தின் வசூலை முறியடித்தது அமரன் திரைப்படம். இதன் காரணமாக அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் என்பது உறுதியாகிவிட்டதாக ரசிகர்களில் ஒருதரப்பினர் சொல்லிவருகின்றனர். மேலும் உலக அளவில் இதுவரை அமரன் 350 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமலின் பிளான்: இதற்கிடையே சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருப்பதால் அமரன் படத்துக்கு இன்னமும் தியேட்டரில் கூட்டம் குறையவில்லை. இதன் காரணமாக வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமரன் படத்தின் சக்சஸ் மீட்டை நடத்துவதற்கு படத்தின் தயாரிப்பாளர் கமல் ஹாசன் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அந்த வெற்றி விழாவை படு பிரமாண்டமாக நடத்துவதற்கும்; அந்த விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதற்கும் அவர் முடிவு செய்திருப்பதகாவும்; இப்போது அமெரிக்காவில் இருக்கும் அவர்; இந்தியா திரும்பியதும் அதற்கான வேலைகளில் இறங்குவார் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











