கமல்ஹாசனும் தம்மடித்தவர்தானாமே.. 'லிப் டூ லிப்' புக்காக விட்டு விட்டாராம்!

By Siva

சென்னை: சிறு வயதில் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்ட கமல் ஹாஸன் படங்களில் லிப் டூ லிப் காட்சிகளில் நடிப்பதற்காக அந்த பழக்கத்தை கைவிட்டாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டவர். இந்நிலையில் கமல் ஹாஸன் தன் புகைப்பிடிக்கும் பழக்கம் பற்றி தெரிவித்துள்ளார்.

எதையும் வித்தியாசமாக செய்யும் கமல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டதும் வித்தியாசமான காரணத்திற்காக தான்.

11 வயதில்

11 வயதில்

கமல் ஹாஸன் தனது 11வது வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். பல ஆண்டுகளாக இருந்த பழக்கத்தை அவர் கைவிட வேண்டிய கட்டாயம் வந்தது அவர் ஹீரோவான பிறகு.

முத்த காட்சி

முத்த காட்சி

கமல் ஹாஸன் படம் என்றால் முத்தக் காட்சி இருக்கும். அப்படி ஹீரோயின்களுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும்போது தம்மடித்துவிட்டு கொடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் அந்த பழக்கத்தை கைவிட்டுள்ளார் கமல்.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

நாள் முழுக்க நான் காபி குடித்துவிட்டு, தம்மடித்துவிட்டு மாலை நேரத்தில் படப்பிடிப்பில் ஹீரோயின்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அவர்களின் நிலைமையை நினைத்து தான் தம்மடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றார் கமல்.

நீங்களும் விட்டுடுங்க

நீங்களும் விட்டுடுங்க

வாலிபர்களே உங்களின் கேர்ள் பிரண்ட்ஸ் மற்றும் மனைவிகளின் நிலைமையை நினைத்தாவது நீங்கள் தம்மடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X