twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலின் ‘அப்பு’ ரகசியத்தைப் போட்டுடைத்த பி.சி.ஸ்ரீராம்....

    |

    சென்னை: இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான்.

    அப்படித் தான், 1989ல் வெளிவந்த 'அபூர்வ சகோதர்கள் ' படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார்.

    இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கமல், குள்ளமாக நடித்தது எப்படி என்ற ரகசியத்தை இத்தனை நாள் பொத்தி, பொத்திப் பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது அந்த 'சிதம்பர' ரகசியத்தை போட்டுடைத்திருக்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம்.

    இது குறித்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்....

    கேமரா ட்ரிக்...

    கேமரா ட்ரிக்...

    கமல் கால் மடிச்சு நடித்த சில இடங்கள் போக, பல இடங்கள் கேமரா ட்ரிக்.

    கலர் கலரா பிலிம்...

    கலர் கலரா பிலிம்...

    கமல் பிரேம் ஓரத்தில் இருப்பார். நான் தேவைக்கு அதிகமாகவே சர்க்கஸ் கூடாரத்தின் கலர் கலரான கேலரியை பிரேமில் காட்டுவேன்.

    உங்கள ஏமாத்தினோம் பாஸூ...

    உங்கள ஏமாத்தினோம் பாஸூ...

    அங்க ஏதோ இருக்குனு உக்க பார்வை திசை திரும்பும் சமயம், கமலோட காலை அவரோட நடவடிக்கையை உன்னிப்பாக் கவனிக்க மாட்டீங்க. இந்த மாதிரி பல காட்சிகளில் ரசிகர்களை ஏமாற்றினோம்.

    ஒரு புக்கே எழுதலாம்...

    ஒரு புக்கே எழுதலாம்...

    படம் முழுக்க இப்படி ரசிகர்களை நம்ப வைக்க கமல் ரொம்பவே மெனக்கெட்டார். அந்தப் படத்தின் மேக்கிங்கை மட்டும் தனி புத்தகமாகவே எழுதலாம்.

    இப்ப நீங்களே கண்டுபிடிக்கலாம்...

    இப்ப நீங்களே கண்டுபிடிக்கலாம்...

    ‘அப்பு' கமல் போர்ஷன் மட்டும் கிட்டத்தட்ட ஒரு வ்ருஷம் ஷூட் பண்ணினோம். இப்போ பொறுமையா அந்தப் படத்தை ப்ரீஸ் பண்ணிப் பார்த்தா நீங்களே பல கேமரா ட்ரிக்குகளை சுலபமாக் கண்டுபிடிச்சுடுவீங்க...

    கமல் ஒரு ஆச்சர்யம்...

    கமல் ஒரு ஆச்சர்யம்...

    இப்போ இருக்கற டெக்னாலஜி எதையும் சாத்தியப் படுத்தும் நிலைமையில் இங்கே எல்லாம் சாத்தியம். ஆனா, அப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாத அந்த நாட்களிலேயே கமல் அட்டகாசப் படுத்தியது தான் ஆச்சர்யம்' எனப் புல்லரித்துள்ளார் பி.சி.ஸ்ரீராம்.

    English summary
    who can forget ‘Appu’ in Apoorva Sagodarargal? The movie, which was released in the year 1989, was a mind-boggling visual treat. Having been released in an era that did not have computer graphics, the secret behind the making of the Appu character still remains a mystery. However, P.C Sriram, the cinematographer of the movie, gave a few hints about the secret behind it, in a recent interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X