»   »  மலையாள இயக்குநர் ஷாஜி கருணுடன் கைகோர்க்கிறார் கமல்?

மலையாள இயக்குநர் ஷாஜி கருணுடன் கைகோர்க்கிறார் கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளப் பட உலகம் கமலுக்குப் புதிதல்ல. கிட்டத்தட்ட அங்கிருந்துதான் அவரது ஹீரோ பிரவேசம் ஆரம்பமானது.

கிட்டத்தட்ட இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் கமல்.

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி என் கருண் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமல் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan in Shaji N Karun's 'Gaadha'

முதலில் டிகே ராஜீவ் குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என செய்திகள் வந்தன. ஆனால் இப்போது ஷாஜி என் கருணுக்கு ஓகே சொல்லியுள்ளாராம் கமல்.

எழுத்தாளர் டி பத்மநாபனின் கடல் என்ற கதையைத் தழுவி காதா என்ற பெயரில் திரைக்கதை அமைத்திருந்தார் ஷாஜி. இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் மோகன் லால். ஆனால் அவர் திடீரென விலகிக் கொண்டார்.

இப்போது கமல் நடிக்கப் போகிறார்.

ஷாஜி என் கருண் ஏற்கெனவே பிறவி, வனப்ரஸ்தம், குட்டி ஷ்ரங்கு போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர்.

English summary
According to media reports in Kerala, Kamal Haasan will be doing award winning filmmaker Shaji N Karun's new film titled Gaadha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil