கட் அவுட் வைத்துக் கலக்கிய துபாய் ரசிகர்கள்.. சந்தித்தார் கமல்!

By Mayura Akilan

துபாய்: உத்தமவில்லன் படம் துபாயில் நேற்று திரையிடப்பட்டது. ரசிகர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் உரையாடினார் கமல்... படம் பார்த்த ரசிகர்கள் சுடச்சுட விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.

ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள உத்தம வில்லன் படத்தில் கமல்ஹாசனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம், ஊர்வசி, பார்வதிமேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் கே.விஸ்வநாத் மற்றும் மறைந்த கே.பாலச்சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று இந்தியாவில் ரிலீசாகிறது.

துபாயில் உத்தமவில்லன்

துபாயில் உத்தமவில்லன்

துபாயில் கோல்டன் சினிமா திரையரங்கத்தில் நேற்று உத்தமவில்லன் திரையிடப்பட்டதையொட்டி ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

கட் அவுட் வைத்த ரசிகர்கள்

கட் அவுட் வைத்த ரசிகர்கள்

தமிழ்நாட்டைப் போல துபாயிலும் நடிகர் கமலஹாசனின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. ஆட்டம் பாட்டத்துடன் தியேட்டர் வளாகத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.

ரசிகர்களுடன் கமல்

ரசிகர்களுடன் கமல்

கோல்டன் சினிமா திரையரங்குக்கு ‘உத்தம வில்லன்' படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகளுடன் நடிகர் கமலஹாசன் வருகை தந்து அங்கு குவிந்திருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை நேரில் சந்தித்தார். கமல் வருகையை அறிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் அந்த பகுதியே திருவிழா கோலம் பூண்டது.

வெளிநாட்டு ரசிகர்கள் விமர்சனம்

படம் பார்த்த துபாய் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளனர். கொஞ்சம் இனிப்பு... கொஞ்சம் நகைச்சுவை... உணர்வுப்பூர்வமான நகைச்சுவை... உத்தம வில்லன் படத்தை விரும்புகிறேன் என்று ஒரு ரசிகை பதிவிட்டுள்ளார்.

அட்டகாச நடிப்பு

உத்தமவில்லனில் கமல் அசத்திவிட்டார். பின்னணி இசை சூப்பர் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர். அதே சமயம் ஒரு சில ரசிகர்களோ உத்தமவில்லனை ரசிக்க நிறைய பொறுமை வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

பூஜா குமார் செட் ஆகலையே

இன்னொரு ரசிகரோ படத்தில் நாசரின் நடிப்பு சூப்பர் என்றும் கமலுக்கு பூஜா குமார் சரியாக செட் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார்.

கிளைமாக்ஸ் சூப்பர்

கமலின் மற்றொரு மாஸ்டர் பீஸ் உத்தமவில்லன் என்று கூறியுள்ள ஒரு ரசிகர், கிளைமாக்ஸ் சூப்பர், எமோசனல் என்று பதிவிட்டுள்ளார். நடிப்பை பொறுத்தவரைக்கும் ஓ.கே ஆனால் மொத்தத்தில் காரசாரமில்லை என்பது ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X