தேவர் மகன் படம் பற்றி கமல் ஹாசன் சொன்ன சீக்ரெட்.. அட செம ஸ்பீடா இருந்திருக்காரே ப்பா

சென்னை: கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் ஒரு புதுமை இருக்கும். இதன் காரணமாகவே அவரை எல்லோரும் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவரும் கமல் ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தியன் 2 படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தேவர் மகன் படம் குறித்து கமல் ஹாசன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கமல் ஹாசன் என்ற பெயரை இந்திய சினிமாவின் வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது. சிறு வயதிலிருந்தே கேமரா முன் நிற்கும் அவர் சினிமாவின் அனைத்து ஜானரிலும் புகுந்து விளையாடக்கூடியவர். சினிமா மட்டுமின்றி உலக விஷயங்கள் அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பவர். அறிவு வளர்வதற்கு கல்வி முக்கியம்தான். இருந்தாலும் பள்ளி கல்வி முடிக்காத ஒருவர் இவ்வளவு அறிவோடு இருக்கிறாரே என்று பலரும் கமல் ஹாசனை பார்த்து ஆச்சரியம்தான் படுவார்கள்.

Kamal Haasan Devar Magan

அரசியல் என்ட்ரி: 233 படங்களில் நடித்திருக்கும் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார். ஆனால் சினிமாவில் ஜொலித்தது போல் அரசியல் களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. அதனை புரிந்துகொண்ட அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது. அந்த மெகா ஹிட் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே புத்துணர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த வருடத்தில் அதற்கு முன்பு வந்த தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் ஹிட்டடிக்காமல் வேற்று மொழி படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அடுத்தடுத்த படங்கள்: விக்ரம் பட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துமுடித்திருக்கிறார். படமானது அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது. மேலும் கல்கி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் நாளை வெளியாகிறது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து எஸ்டிஆர் 48, சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் ஆகிய படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இப்படி ஆண்டவர் கமல் ஹாசன் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தேவர் மகன்: இதற்கிடையே கமல் ஹாசனின் கரியரில் தேவர் மகன் படம் முக்கியமானது. இன்றுவரை அந்தப் படம் பாராட்டையும், விமர்சனத்தையும் ஒருசேர பெற்றிருக்கிறது. கடந்த வருடம் வெளியான மாமன்னன் படத்தின் விழாவின்போதுகூட மாரி செல்வராஜ் அந்தப் படம் பற்றி பேசியது விவாதப்பொருளானது நினைவுகூரத்தக்கது. இந்த சூழலில் அந்தப் படம் குறித்து கமல் ஹாசன் இந்தியன் 2 மேடையில் பேசியிருக்கிறார்.

கமல் ஹாசன் பேச்சு: அவர் தேவர் மகன் குறித்து பேசுகையில், "தேவர் மகன் படம் எனக்கு முக்கியமானது. அந்தப் படத்தின் கதையை எழுதும்போது சிவாஜியை நினைத்துக்கொண்டேன். எனது சொந்த ஊரை நினைத்துக்கொண்டேன். என்னையும் நினைத்துக்கொண்டேன். தேவர் மகன் படத்தின் கதையை ஏழே நாட்களில் எழுதி முடித்தேன்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னது தேவர் மகன் என்ற க்ளாஸிக் படத்தை 7 நாட்களில் கமல் எழுதி முடித்துவிட்டாரா என்று ஆச்சரியத்துடன் சமூக வலைதளங்களில் கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X