கல்கி படத்தில் நடிக்க ரொம்பவே யோசித்தேன்.. என்ன கமல்ஹாசனே இப்படி சொல்லிட்டாரு?

மும்பை: தெலுங்கு திரையுலகின் ஃபேமஸ் ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட அவர் இப்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படமானது நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ப்ரோமோஷனில் கமல் ஹாசன் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

Kamal Haasan Kalki Prabhas

மொக்கை வாங்கிய ஆதி புருஷ்: ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக ரிசல்ட் இருந்தது. ஆதிபுருஷை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி மாஸ் ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகி மீண்டும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்த்திருக்கிறார் பிரபாஸ். சலார் படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி 2898 ஏடி: இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கடுமையாக ட்ரோல் செய்த ரசிகர்கள் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

நட்சத்திர பட்டாளம்: இப்படம் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவாகியிருக்கிறது. நாக் அஸ்வின் படத்தை இயக்க; பிரபாஸுடன் கமல் ஹாசன், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சான், திஷா பதானி என பலர் நடித்திருக்கின்றனர். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லருக்கு ரசிகர்கள் தங்களது உச்சக்கட்ட வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். படமானது நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது.

கமல் பேட்டி: இந்நிலையில் கல்கி படத்தின் ப்ரோமோஷனில் பேசிய பிரபாஸ், 'கல்கி படத்தில் நடிப்பதற்கு கமல் சார் ஒரு வருடம் யோசித்தார். அவரை டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன்' என்றார். இதனையடுத்து பேசிய கமல் ஹாசன், "டார்ச்சர் எல்லாம் இல்லை. என் மீது சந்தேகம் எனக்கே இருந்தது. அமிதாப் நடித்திருக்கிறார் பிரபாஸ் நடித்திருக்கிறார். அப்படி இருக்கும்போது நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே அதற்கு காரணம். இதற்கு முன்பு நான் கெட்டவனாக நடித்ததே இல்லை என்று சொல்லவில்லை. கெட்ட ஹீரோ, சைக்கோ உள்ளிட்ட கேரக்டர்களை செய்திருக்கிறேன். ஆனால் இது வேறு மாதிரியானது" என்றார்.

More from Filmibeat

Read more about: kamal haasan kalki prabhas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X