ஒரு சூப்பர் ஸ்டார் அப்படி செய்வாரா?.. இந்தியன் 2 மேடையில் ஓபனாக பேசிய கமல் ஹாசன்
சென்னை: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கும் சூழலில் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியன் 2 படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது கமல் ஹாசன் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த கமல் ஹாசன் இடையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கவனம் செலுத்தினார். ஆனால் உலக நாயகன் எதிர்பார்த்தபடி அரசியல் களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டுவரும் அவர், மீண்டும் சினிமாவை கவனிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தனது ரீ என்ட்ரியை தரமாக கொடுத்தார் அவர்.

இந்தியன் 2: படம் மெகா ஹிட்டானதை அடுத்து; நின்றுபோன இந்தியன் 2 படத்தின் பணிகளும் தூசு தட்டப்பட்டன. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் இந்தியன் 2 ஷூட்டிங் நின்று போயிருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் இந்தியன் 2வில் நடிக்க ஆரம்பித்தார். ஷங்கரும் முழுமூச்சாக இறங்கி வேலை செய்தார். இதில் கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மும்முரமாக நடந்தது. கமல் ஹாசனும் இந்தப் படத்துக்காக கடுமையாகவே உழைத்திருக்கிறார். ஒருவழியாக ஷூட்டிங் மற்றும் இதர பணிகள் முடிந்து படமானது அடுத்த மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்தியன் படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் கமலின் ரசிகர்களோ; இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று உறுதிபட கூறினர்.
பொய்த்துப்போன நம்பிக்கை?: ஆனால் அவர்களது நம்பிக்கை பொய்த்துப்போகும்படி அமைந்துவிட்டது ட்ரெய்லர். நேற்று வெளியான இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர். இது என்ன இந்தியன் 2வா இல்லை தசாவதாரம் 2வா? இவ்வளவு கெட்டப்புகளில் வருகிறாரே; முக்கியமாக கமல் ஹாசனுக்கு மேக்கப்பும் சரியில்லை என்று ஓபனாகவே பேசிவருகின்றனர். ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் கமல் ரசிகர்களை மட்டுமின்றி படக்குழுவையும் அப்செட்டாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கமல் ஹாசன் பேச்சு: இந்நிலையில் நேற்று இந்தியன் 2 படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய கமல் ஹாசன், "நானும் ஷாருக்கானும் ஒன்றாக பணியாற்றியபோது சாதாரணமாகத்தான் இருந்தது. அவரை சூப்பர் ஸ்டாராக நான் பார்க்கவில்லை. என்னை ஒரு பெரிய இயக்குநராக அவர் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள் அவ்வளவுதான்.
மக்கள் கொடுக்கிறார்கள். ஒருவரை ஒருவர் நாங்கள் சூப்பர் ஸ்டாராக பார்த்துக்கொள்வதில்லை. மக்கள் அந்த டைட்டிலை கொடுக்கிறார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் அவ்வளவுதான். ஹேராம் படத்துக்கு அவர் சம்பளமே வாங்கவில்லை. அதைவிட வேறு என்ன வேண்டும். ஒரு சூப்பர் ஸ்டார் அப்படி செய்வாரா. சினிமாவுக்கு நிஜமான ரசிகராக இருப்பவர் அவர். ஒரு சிறந்த நடிகராக இருப்பவர். அவருக்கு நான் நன்றியுடன் இருப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











