உலக நாயகன் கமலுக்கு 58 வயது: குவியும் வாழ்த்துக்கள்

By Siva

சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 58வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பில் பற்பல சாதனைகள் படைத்துள்ள கமல் ஹாசன் இன்று தனது 58வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என்று பன்முகம் கொண்டவர். புதுமையை விரும்புபவர். அவரது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

இயக்குனர் கே.பாலச்சந்தர் வாழ்த்து

இயக்குனர் கே.பாலச்சந்தர் வாழ்த்து

நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் திறமையுள்ளவர் கமல். தமிழ் திரையுலகில் பெரிய சாதனை படைத்துள்ள அவர் விரைவில் ஹாலிவுட்டிலும் முத்திரை பதிப்பார்.

புறம்பேசாத கமல்: குஷ்பு

புறம்பேசாத கமல்: குஷ்பு

கமல் ஹாசன் சக நடிகர் மட்டுமல்ல அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். நாங்கள் 24 மணிநேரமும் பேசிக்கொள்ளாவிட்டாலும் இன்ப, துன்பங்களில் ஒன்றாக இருக்கிறோம். அவர் அவராக இருக்கிறார். யாரைப் பற்றியும் புறம்பேசாத அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இன்னும் 50 ஆண்டுகள் வாழ வேண்டும்: த்ரிஷா

இன்னும் 50 ஆண்டுகள் வாழ வேண்டும்: த்ரிஷா

கமல் சாருடன் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சுயநலமில்லாதவர். எனக்கு தூண்டுகோலாக இருப்பவர். இளம் நடிகர்களுக்கு உதவுபவர். அவருடன் நான் நடித்த மன்மதன் அம்பு ஷூட்டிங் கப்பலில் நடந்தது. அது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவம். அவர் இன்னும் 50 ஆண்டுகள் நலமாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

பாலிவுட்டில் கமலால் தான் எங்களுக்கு மரியாதை: பிரபுதேவா

பாலிவுட்டில் கமலால் தான் எங்களுக்கு மரியாதை: பிரபுதேவா

கமலின் வெற்றி விழா படத்தில் தான் எனது டான்ஸ் துவங்கியது. அதன் பிறகு நான் நடிகனாகி கமலுடன் சேர்ந்து காதலா காதலா படத்தில் நடித்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பே பாலிவுட்டில் பெரிய சாதனை படைத்தவர் கமல். அவரால் தான் தற்போது பாலிவுட்டில் எங்களுக்கு எல்லாம் மரியாதை கிடைக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X