இந்தியை அப்புறம் பார்க்கலாம்.. பக்கத்து மாநில மொழியை கத்துக்கோங்க.. கமல் ‘தக் லைஃப்’ பேச்சு!

சென்னை: கேரளாவின் கொச்சிக்கு சென்று 'தக் லைஃப் படத்தின் புரமோஷனை செய்த கமல்ஹாசன் "இந்தி மொழியை அப்புறம் பார்க்கலாம் என்று பேசியது பெரும் பரபரப்பை கூட்டியுள்ளது. தென்னிந்தியா முழுவதுமே திராவிட நாடு என்றும் நாம் எல்லாம் திராவிடர்கள் என்றும் பேசியுள்ளார் கமல்ஹாசன்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்துள்ளதே ரசிகர்களுக்கு இந்தமுறை இந்த கூட்டணி எப்படியான படத்தைக் கொடுக்கப் போகிறது என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

Kamal Haasan Thug Life speech at Kochi promotion on Hindi

ஹாலிவுட்டில் வெளியான காட் ஃபாதர் படத்தின் இன்ஸ்பிரேஷனை கொண்டு வரதராஜ முதலியார் என்பவரின் லோக்கல் கதையையும் எடுத்துக் கொண்டு நாயகன் படத்தை மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து 1987ம் ஆண்டே கொடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் வியக்க வைத்தனர்.

நாயகனை மிஞ்சும் தக் லைஃப்: இந்தியன் 2 படத்தின் புரமோஷனின் போது கமல்ஹாசன், இந்தியன் 2வை விட தனக்கு இந்தியன் 3 படமே ரொம்ப பிடித்த படம் என்று பேசியிருந்தார். ஆனால், அப்போது அவர் சொன்னது யாருக்கும் புரியவில்லை. படம் வெளியான பின்னர், இந்தியன் 2 படத்தை பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில், விக்ரம் படத்துக்குப் பிறகு பயங்கர நம்பிக்கையுடன் தக் லைஃப் படத்தை புரமோட் செய்து வரும் கமல்ஹாசன், கண்டிப்பாக இந்த படம் நாயகன் படத்தை மிஞ்சும் எனக்கூறியுள்ளார்.

இந்தியை அப்புறம் பார்க்கலாம்: தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜிங்குச்சா பாடலில் ஆரம்பித்து கடந்த ஒரு மாதமாகவே தனது படக்குழுவுடன் சூறாவளி புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார் விண்வெளி நாயகன். வட இந்தியா, ஐதராபாத், பெங்களூரு மற்றும் கொச்சி என இந்தியா முழுவதும் தக் லைஃப் படத்துக்கான புரமோஷனை தீவிரமாக பார்த்து வரும் கமல்ஹாசன், கொச்சியில் நடைபெற்ற புரமோஷனின் போது, இந்தியை அப்புறம் பார்த்துக்கலாம். முதலில் பக்கத்து ஸ்டேட் பாஷையை கற்போம் எனக் கூறியுள்ளார்.

தமிழில் பேசினால் புரியும்: தமிழ்நாட்டில் நான் மலையாளத்தில் பேசினால் கொஞ்சம் புரியும். ஆனால், ரொம்ப நேரம் பேசினால், அவர்களுக்கு புரியாது. ஆனால், இங்கே கேரளாவில் உங்களுக்கு தமிழில் எவ்வளவு நேரம் நான் பேசினாலும் புரியும். நாம் எல்லாருமே திராவிடர்கள், இந்தியை அப்புறம் பார்த்துக்கலாம். முதலில் பக்கத்து ஸ்டேட் மொழியை பேசவும், எழுதவும், புரிந்துக் கொள்ளவும் கற்றுக்கொள்வோம். நமக்கு முதலில் நம் பாஷையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் ரொம்பவே முக்கியமான விஷயம் என்றும் பேசியுள்ளார்.

பான் இந்தியா ரிலீஸ்: தக் லைஃப் திரைப்படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன். இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் புரமோஷனை முடுக்கிவிட முடிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஜிங்குச்சா, சுகர் பேபி பாடல்கள் ஹிட் அடித்துள்ள நிலையில், நாளை மே 24ம் தேதி மாலை 5 மணிக்கு சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக ஆடியோ வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது. வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக காத்திருக்கும் தக் லைஃப் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X