இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கப் போவது யாரு?.. கமல் vs ரஜினி போட்டி பலமா இருக்கும் போலயே!

சென்னை: இந்திய சினிமாவில் இப்போதைக்கு டாப் வசூல் படங்களை கொடுத்து இந்தி சினிமாவையே அதிர வைத்து வரும் திரையுலகம் என்றால் அது தெலுங்கு சினிமா தான். இளம் நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் என 4 பெரிய தூண்கள் டோலிவுட் சினிமாவை தாங்கி பிடித்து வருகிறது.

அதே போல இயக்குநர்கள் வரிசையிலும் ராஜமெளலி, சுகுமார், சந்தீப் வங்கா ரெட்டி, நாக் அஸ்வின் என பலர் வரிசைக் கட்டி 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸையே அல்வா போல ஹீரோக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

Kamal Haasan vs Rajinikanth will ready for the big battle at the Box Office this year

ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை பெரிய பாக்ஸ் ஆபீஸ் படங்களை ரஜினிகாந்த் மற்றும் விஜய் மட்டுமே கொடுத்து வருகிறார். விக்ரம் படத்தின் மூலம் கமல்ஹாசன் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் படத்தையும் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கக் கூடிய தமிழ் படத்தையும் யார் கொடுக்கப் போகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி கோடம்பாக்கத்தில் உள்ள பல பிரபலங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் நிறையவே உள்ளன.

குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 173 கோடி வசூலை அள்ளியுள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அறிவித்துள்ளார். விடாமுயற்சி படத்தை டிராகன் படம் முந்திவிட்டது என கலாய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அஜித் குமார் தனது பாக்ஸ் ஆபீஸ் படைபலத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக 300 கோடியை படம் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரெட்ரோ வசூல் எப்படி இருக்கும்?: அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய படமாக வரும் மே 1ம் தேதி சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் வெளியாக காத்திருக்கிறது. இதுவரை சூர்யா படங்களோ, கார்த்திக் சுப்புராஜ் படங்களோ வசூல் ரீதியாக பெரிதாக கலெக்ட் செய்யாத நிலையில், ரெட்ரோ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியானால் 200 கோடி வரை வசூல் வரும் என்கின்றனர். அதையும் தாண்டி வசூல் வேட்டை நடத்தினால் தான் தரமான சம்பவமாக இருக்கும் என்கின்றனர்.

Kamal Haasan vs Rajinikanth will ready for the big battle at the Box Office this year

ரஜினிகாந்த் vs கமல்ஹாசன் போட்டி: தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் vs கமல்ஹாசன் போட்டி நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஆண்டும் இவர்கள் இருவருக்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவப் போவதாக சினிமா வட்டாரங்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் விக்ரம் படத்தை தாண்டி பெரிய வசூல் வேட்டை நடத்தும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள கூலி திரைப்படம் தக் லைஃப் வசூலையும் முந்தி இண்டஸ்ட்ரி ஹிட் அடிப்பது உறுதி என்கின்றனர். ஆனால், இந்த இரு படங்களுக்கு இடையே தான் இந்த ஆண்டு பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X