இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்... கமல்ஹாசன் விருப்பப்பதிவு

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Superstar Rajinikanth தற்போதைய உடல்நிலை மருத்துவமனை அறிக்கை

அவரது உடல்நிலை தேறியுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த வாரத்தில் அவருக்கு கலையுலகின் முதன்மை விருதான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் விருதினை பெற்றுக் கொண்டார்.

ரஜினிக்கு உடல்நலக் குறைவு

ரஜினிக்கு உடல்நலக் குறைவு

அவருக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நேரில் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இதையடுத்து சென்னை திரும்பிய அவருக்கு நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனை அறிக்கை

மருத்துவமனை அறிக்கை

அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நலம்பெற கமல் வாழ்த்து

நலம்பெற கமல் வாழ்த்து

அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினி விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பதிவு

ட்விட்டரில் பதிவு

அவர் தனது ட்விட்டரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என விரும்புவதாக பதிவிட்டுள்ளார். கமல் மற்றும் ரஜினி இருவரும் உச்ச நட்சத்திரங்களாக கோலிவுட்டில் இருந்தாலும் தொடர்ந்து தங்களது நட்பை பேணி வருவது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை குறித்து சவுந்தர்யா

உடல்நிலை குறித்து சவுந்தர்யா

ரஜினிகாந்த் உடல்நலம் தேறியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், அவரது மகள் சவுந்தர்யாவும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அனைவரது பிரார்த்தனைகளால் தன்னுடைய தந்தை தற்போது நலம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X