கமல் ஹாசனின் இரண்டு மகள்களை கடத்த முயன்ற வீட்டு பணியாட்கள்?.. அதிர்ச்சி தரும் சம்பவம்
சென்னை: இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். அவரது நடிப்பில் கடைசியாக கல்கி, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இவற்றில் கல்கியில் நெகட்டிவ் ரோலிலும், இந்தியன் 2வில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
கமல் ஹாசன் என்றால் குழந்தை முதல் பெரியவர்வரை தெரியும். தனது 8ஆவது வயதிலேயே கேமரா முன்பு நின்று, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கொஞ்சம் மழலை முகத்துடன் எந்தவித பதற்றமுமின்றி நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் பயணப்பட்ட அவர் முதலில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார். பிறகு கே.பாலசந்தர் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகம்: தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.
இந்தியன் 2: அவர் ஹீரோவாக நடித்து அண்மையில் இந்தியன் 2 வெளியானது. அந்தப் படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது. முக்கியமாக இந்தியன் என்ற க்ளாசிக் படத்தை இரண்டாம் பாகம் எடுத்துகெடுத்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் ஓபனாகவே பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் கமல்.
கமலின் பெர்சனல் வாழ்க்கை: கமலைப் பொறுத்தவரை அவரது பெர்சனல் வாழ்க்கை பலமுறை சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. முதலில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு சரிகாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். இருவருமே சினிமாவில் இருக்கிறார்கள். சரிகாவை பிரிந்த கமல் அதன் பின் கௌதமியுடன் வாழ்ந்தார். அந்த லிவிங் டூ கெதர் வாழ்க்கையும் பாதியில் முடிந்தது.
கடத்த முயன்ற பணியாட்கள்: இந்நிலையில் கமலின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது கமலின் திரை வாழ்க்கையில் மகாநதி படம் முக்கியமான ஒன்று. கடத்தப்பட்ட மகளையும், காணாமல் போன மகனையும் ஒரு மிடில் கிளாஸ் தந்தை தேடி கண்டுபிடிப்பதுதான் படத்தின் ஒன்லைன். இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக அந்தப் படம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் கமலின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவமாம்.
அதாவது கமலின் இரண்டு மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனை அவரது வீட்டில் வேலை செய்த பணியாட்கள் கடத்த முயன்றார்களாம். அது எப்படியோ கமல் ஹாசனுக்கு தெரியவந்ததை அடுத்து உச்சக்கட்ட கோபத்துக்கே சென்றுவிட்டாராம். மேலும் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உச்சக்கட்ட வெறிக்கு சென்றுவிட்டாராம். அந்த சம்பவம் அவரது மனதில் நீங்காமல் தங்கிவிட்டதை அடுத்து; அதனை மையமாக வைத்துதான் மகாநதி கதையை யோசித்தாராம் கமல் ஹாசன்.


Click it and Unblock the Notifications