இந்த வயதில் இப்படியொரு ஆட்டமா?.. கமல்ஹாசனை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

சென்னை: கமல்ஹாசன் இப்போது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நிச்சயமாக இப்படம் நாயகன் போன்ற ஒரு படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஜூன் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ். படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் கமல் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

இந்திய திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர் கமல்ஹாசன் என்று பலரும் சொல்வார்கள். சிறு வயதிலிருந்தே நடித்துவரும் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு வேறு சில துறைகளிலும் இருந்திருக்கிறார். அதனையடுத்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கமலை ஹீரோவாக அறிமுகமாக்க; குறுகிய காலத்திலேயே முன்னணி மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுவிட்டார். அந்த வயதிலேயே எக்ஸ்பெரிமென்ட்டல் கதைகளை தேர்வு செய்து நடித்து தனி முத்திரை பதித்தார்.

கமலின் இன்னொரு முகம்: வளர வளர இவரது மேஜும் எங்கேயோ சென்றது. ஒருகட்டத்தில் அவருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை சினிமாவில் என்ற பிம்பமும் உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் அவர் அரசியல் பிரவேசம் செய்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவைகளில் போட்டியிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த வரவேற்பை அரசியல் அவருக்கு கொடுக்கவில்லை. இப்போதும் அரசியலில் இயங்கிவந்தாலும் சினிமாவிலும் அவரது கவனம் திரும்பியிருக்கிறது.

Kamal Haasan s Latest Dancing Video Gone Trending on Social Media

இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி தனது செகண்ட் இன்னிங்ஸை லோகேஷ் கனகராஜோடு தொடங்கினார் அவர். விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமலையும் அதே எனர்ஜியோடு ரசிகர்கள் பார்த்தார்கள். உலக அளவில் 500 கோடி ரூபாய்வரை படம் வசூலித்தது. இது உற்சாகம் கொடுத்ததை அடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டானார். அப்படி அவர் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை மட்டுமின்றி கடுமையான கிண்டல்களையும் சந்தித்தது.

மணியுடன் கூட்டணி: தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் சிம்பு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே மணி - கமல் க்ளாசிக் கூட்டணி என்ற பெயர் இருப்பதும்; கமலுடன் சிம்பு வைத்திருக்கும் கூட்டணி முதன்முறை என்பதாலும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவல் கமலுடைய ரசிகர்களிடம் இருக்கிறது. சிம்புவும், கமலும் சேர்ந்து கண்டிப்பாக படத்தில் பெரிய மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார்கள் என்பது ட்ரெய்லரை பார்க்கையில் புரிவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஆடியோ வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய சிம்பு கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டார். அதேபோல் கமலும் சிம்புவுக்கு அட்வைஸ் செய்யும் தொனியில் பேசினார். மேலும் ஜோஜு ஜார்ஜை புகழ்ந்து பேசினார். அதனைப் பார்த்த ஜோஜுவும் எமோஷனலாகிவிட்டார். இப்படி கலவையான உணர்வுகளுடன் அந்த விழா நடந்து முடிந்தது. இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன.

கமலின் செம நடனம்: ப்ரோமோஷனில் கலந்துகொள்வதற்காக கமல், சிம்பு, திரிஷா, மணிரத்னம், அசோக் செல்வன் ஆகியோர் இந்தியா முழுவதும் பறந்துவருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் நடந்த ப்ரோமோஷனில் கலந்துகொண்ட கமல், 'என் ஜோடி மஞ்ச குருவி' பாடலுக்கு அட்டகாசமான நடனத்தை ஆடினார். அந்த நடனத்தின்போது தன்னுடைய சில ட்ரேட் மார்க் ஸ்டெப்ஸ்களையும் போட்டார். அதனைப் பார்த்த ரசிகர்கள் யப்பா இந்த வயதிலும் அவர் இப்படி ஆட்டம் போடுகிறாரே என்று ஆச்சரியத்தோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X