கமல் - அன்பறிவ் இணையும் படம்.. ஷூட்டிங் எப்போது?.. ஆண்டவர் செம பிஸியாக இருக்கார் போல
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் இப்போது நடித்துவரும் படம் தக் லைஃப். கமலுடன் சிம்பு, திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கமல் - மணிரத்னம் பல வருடங்கள் கழித்து இணைந்திருப்பதன் காரணமாக இப்படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்.
அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் இப்போது சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி விக்ரம் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கிய அந்தப் படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், நண்டு ஜெகன், பாபி சிம்ஹா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்தியன் 2 படுதோல்வி: தோல்வி என்பதை மட்டும் தாண்டி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது இந்தியன் 2. கமல் நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அநியாயத்துக்கு ட்ரோலானது என்பது குறிப்பிடத்தக்கது. பழைய சீன்கள், தேறாத இசை, கனெக்ட் ஆகாத வசனங்கள் என ஏகப்பட்ட குறைகள் படத்தில் இருந்ததாக ரசிகர்கள் ரொம்பவே நொந்துகொண்டனர். இதற்கிடையே கமல் ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டானார்.
தக் லைஃப் கூட்டணி: கமலும், மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். இன்றுவரை அந்தப் படம் இந்திய சினிமாவில் பலருக்கும் பிடித்த படமாகவும், இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறது. இப்போது இருவரும் மீண்டும் இணைந்திருப்பதன் காரணமாக தக் லைஃப் கல்ட் க்ளாசிக்காக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் இந்தியன் 2வுக்கு விழுந்த மரண அடியிலிருந்து மீள்வதற்கு தக் லைஃப் படத்தை கமல் பயன்படுத்திக்கொள்வார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
நம்பிக்கையில் ரசிகர்கள்: தக் லைஃப் படத்தின் இன்னொரு ஹைலைட்டாக இருக்கிறார் சிம்பு. செக்க சிவந்த வானம் படத்தில் ஒர்க் செய்த போது சிம்புவை ரொம்பவே மணிரத்னத்துக்கு பிடித்துவிட்டதால் இந்தப் படத்தில் அவருடன் வேலை செய்கிறார். சிம்புவின் கேரக்டர் தொடர்பான வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பியது. நிச்சயம் இதில் சிம்பு மிகப்பெரிய ரோல் செய்திருப்பார் என்று எஸ்டிஆர் ரசிகர்களும் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.
அடுத்த படம்: தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் கமல் ஹாசன். அது அவரது 237ஆவது படமாகும். இந்நிலையில் அந்தப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதன்படி தக் லைஃப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. இந்தப் படத்தை முடித்துவிட்டு சில மாதங்கள் ரெஸ்ட் எடுக்கும் கமல்; அடுத்த வருடம் ஜனவரி மாதம் அன்பறிவ் படத்தின் ஷூட்டிங்கிற்கு தேதி குறித்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











