twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவுதமி... தூரமாய் தனியாய் நின்று நிழலாய் இருந்துவிடு! - கமல் ஹாஸன் ஓபன் ஸ்டேட்மென்ட்

    By Shankar
    |

    கவுதமி... விலகிச் செல்வதால் நீ வீரியமாய் வளர்ந்துவிடுவாய் என்றால், அதுவே உன் விருப்பம் என்றால் தூரமாய் தனியாய் நிழலாய் இருந்துவிடு, என்று கமல் ஹாஸன் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    13 ஆண்டுகள் ஒரே வீட்டில் கமல் ஹாஸனுடன் ஒன்றாக வாழ்ந்த நடிகை கவுதமி, அவரைவிட்டு பிரிந்துவிட்டதாக நேற்று அறிவித்து பரபரப்பு கிளப்பினார்.

    Kamal Hassan's open statement on split with Gouthami

    இந்த நிலையில் அவரது பிரிவு குறித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளார் கமல் ஹாஸன்.

    அந்த அறிக்கையில், "கவுதமி மறக்க முடியாத ஒரு மரபுக் கவிதை. சேர்வதும் செல்வதும் தனிப்பட்ட தகவு. வேற்றுமையில் இருந்த ஒற்றுமை விலகிச் செல்வதில் வீணாகிவிடுவதில்லை என்ற விபரீதக் கொள்கை உடையவன் நான்.

    என் மீது விழும் எச்சம் உன்மீதும் விழாது என்று சொல்வதில் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது. என்னுடன் இருந்த தனிப்பட்ட சந்தோஷம் இன்றும் என்னுடன் கைகோர்த்துக் கொண்டு வரும் என்பதில் வருத்தமில்லை. விலகிச் செல்வதால் நீ வீரியமாய் வளர்ந்துவிடுவாய் என்றால், அதுவே உன் விருப்பம் என்றால் தூரமாய் தனியாய் நிழலாய் இருந்துவிடு.

    என் தட்டில் வந்துவிழுவதை நான்தானே தீர்மானிக்க வேண்டும். தட்டிலிருந்து விழும் மற்ற மலங்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

    தூரமாய் இருந்தால் நல்லது என்று நீயே தீர்மானித்தாய். நீயே தூரமாகிவிட்டாய். இருந்தும் என்னுள் நானே எனக்கு விதித்த தண்டனை என்று சொல்லமாட்டேன். எனக்குள் இருக்கும் இன்னொரு வடிவம் இன்று சற்று விலகி வீழ்ந்துவிட்டது என்று சொல்வதில் தனிப்பட்ட பெருமை இல்லை. ஏனெனில் நீயே உனக்குள் தனிமரம் என்ற வனாந்தரத்தில் வசந்தமாய் வளர்ந்துவிட்டாய்.

    உனக்குள் என்றும் அன்புடன்

    கமல்.

    -இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த அறிக்கையை கமல் எழுதவில்லை, யாரோ லீக் செய்திருக்கிறார்கள் என்று ஒரு தகவல் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

    English summary
    Kamal Hassan's open statement on his split with partner Gouthami.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X