மேக்கப்புக்கு மட்டுமே தினமும் நான்கு மணி நேரம் செலவழிக்கும் கமல்!

By Shankar

மேக்கப் விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு முன்னோடி கமல்ஹாஸன்தான். அத்தனை மெனக்கெடுவார்.

பாத்திரத்துக்கேற்பட உருவ அமைப்பைக் கொண்டு வருவதில் கமலுக்கு நிகர் அவர்தான்.

இந்த முறை உத்தமவில்லனுக்காக இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத புதிய தோற்றத்தில் வரவிருக்கிறார் கமல்.

தெய்யம் கலைஞர்

தெய்யம் கலைஞர்

கேரளத்தின் மலபார் பகுதியில் பிரபலமாக உள்ள தெய்யாட்ட கலைஞராக இந்தப் படத்தில் தோன்றுகிறார். இன்னொரு வேடத்தில் சினிமா இயக்குநராகத் தோன்றுகிறார்.

4 மணி நேர மேக்கப்

4 மணி நேர மேக்கப்

இந்த இரு வேடங்களையும் வித்தியாசப்படுத்த கடுமையாக உழைக்கிறார் கமல். தெய்யாட்டக் கலைஞர் வேடத்துக்காக தினமும் 4 மணி நேரம் மேக்கப் போடுகிறார் கமல்.

மாலை வரை

மாலை வரை

படப்பிடிப்புக்கு அதிகாலையிலேயே வந்துவிடும் அவர், அப்போதே ‘மேக்கப்' போட உட்கார்ந்து விடுகிறாராம். மேக்கப் நிபுணர்கள் தொடர்ந்து அவருக்கு நான்கு மணி நேரம் மேக்கப் போடுகின்றனர். இந்த மேக்கப்பை மாலை வரை கலைக்க முடியாது. பகல் உணவு கூட மேக்கப்புடன்தானாம். கடந்த சில தினங்களாக தினமும் இது தொடர்கிறது.

பாலச்சந்தர்

பாலச்சந்தர்

படத்தில் கமல் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். இயக்குநர் பாலச்சந்தரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயராம், ஊர்வசியும் படத்தில் உண்டு. நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X